
பயிற்சி இல்லாமல் வர்த்தகத்தில் இறங்குவது, பரபரப்பான மோட்டார்வேயில் முதல்முறையாக வாகனம் ஓட்டுவதைப் போன்றது: அபாயகரமானது, திணறடிக்கக்கூடியது. அங்குதான் டெமோ வர்த்தகக் கணக்கு உதவுகிறது! இது உங்களுக்கான வர்த்தக சோதனை ஓட்டம். சந்தைகளை ஆராயவும், வர்த்தக உத்திகளைச் சோதிக்கவும், வர்த்தகக் கருவிகளுடன் பழகவும் இது வாய்ப்பளிக்கிறது. அதுவும் ஒரு சென்ட் உண்மையான பணத்தைக்கூட அபாயத்தில் வைக்காமல்.
டெமோ வர்த்தகக் கணக்கு என்றால் என்ன, அது ஏன் முக்கியம்?
டெமோ வர்த்தகக் கணக்கு என்பது வர்த்தகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கற்றுக்கொள்ள உதவும் இலவசமான, அபாயமற்ற வழியாகும். இது உண்மையான சந்தை நிலைமைகளை அணுக உங்களை அனுமதிக்கிறது. மெய்நிகர் நிதியைப் பயன்படுத்தி வெவ்வேறு உத்திகளைப் பயிற்சி செய்யலாம். இதை வர்த்தகர்களுக்கான விமான சிமுலேட்டராக நினைத்துக்கொள்ளுங்கள். உண்மையான நிதி அபாயத்தின் கொந்தளிப்பு இல்லாமல் முழுமையான அனுபவத்தைப் பெறுவீர்கள்.
டெமோ வர்த்தகக் கணக்கை எங்கே திறக்கலாம்?
Deriv தனது அனைத்து வர்த்தகத் தளங்களிலும் டெமோ கணக்குகளை வழங்குகிறது. இவற்றில் மெய்நிகர் நிதியாக USD 10,000 ஏற்றப்பட்டிருக்கும். உங்கள் இருப்பை எப்போது வேண்டுமானாலும் நிரப்பிக்கொள்ளலாம். ஃபாரெக்ஸ் முதல் பங்குகள், கிரிப்டோ கரன்சிகள், சிந்தெடிக் சுட்டெண்கள் வரை பல்வேறு சந்தைகளை ஆராயலாம்.
உண்மையான பணத்தைப் பயன்படுத்தாமல் வர்த்தகப் பயிற்சி

சில வர்த்தகர்கள் அனுபவம் இல்லாமல் பெரும் லாபத்தை நாடி, மிக விரைவிலேயே உண்மையான வர்த்தகத்தில் இறங்குகிறார்கள். இது பெரும்பாலும் வேதனையான இழப்புகளுக்கு வழிவகுக்கிறது. டெமோ கணக்கு மூலம் நீங்கள் உத்திகளைச் சோதிக்கலாம், அபாய மேலாண்மைக் கருவிகளைப் புரிந்துகொள்ளலாம், உண்மையான நிதியை இழக்காமல் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளலாம்.
Deriv Trader தளத்தில் நீங்கள் ஆப்ஷன்கள் வர்த்தகத்தைப் பயிற்சி செய்யலாம். மேலும் Multipliers ஐயும் ஆராயலாம். இவற்றில் Stop Loss, Take Profit, வர்த்தக ரத்து வசதி போன்ற அபாய மேலாண்மைக் கருவிகள் உள்ளன.
சந்தைப் பகுப்பாய்வுக்கு டெமோ கணக்குகளைப் பயன்படுத்துதல்
சந்தைகள் போக்குகள், உலக நிகழ்வுகள், வர்த்தகர்களின் நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் நகர்கின்றன. இந்த நகர்வுகளைப் புரிந்துகொள்வது மிக அவசியம். டெமோ கணக்கு மூலம் நீங்கள் நேரடி சந்தை நிலைமைகளை ஆய்வு செய்யலாம், தொழில்நுட்பப் பகுப்பாய்வுக் கருவிகளைச் சோதிக்கலாம், பணத்தை இழக்கும் அச்சம் இல்லாமல் உத்திகளை உருவாக்கலாம்.
இதற்கு Deriv MT5 (DMT5) சிறந்த தளமாகும். உண்மையான கணக்கைப் பயன்படுத்தும் முன் முழுமையான வர்த்தக அனுபவத்தைப் பெற உதவும் மேம்பட்ட வரைபடக் கருவிகள், குறிகாட்டிகள், பகுப்பாய்வு அம்சங்கள் ஆகியவற்றை இது வழங்குகிறது.
நேரடி வர்த்தகத்தைத் தொடங்கும் முன் வர்த்தகத் திட்டத்தை உருவாக்குதல்
சிறந்த வர்த்தகர் ஒருபோதும் உணர்ச்சிவசப்பட்டு வர்த்தகம் செய்வதில்லை. கட்டமைக்கப்பட்ட வர்த்தகத் திட்டம் உங்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க உதவும். டெமோ கணக்கு மூலம் நீங்கள் இவற்றைச் செய்யலாம்:
- யதார்த்தமான இலக்குகளை அமைத்து, உங்களுக்குப் பொருந்தும் வர்த்தக பாணியைத் தேர்ந்தெடுக்கலாம் (ஸ்கால்ப்பிங், ஸ்விங் வர்த்தகம் போன்றவை).
- தொழில்நுட்பக் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி நுழைவு, வெளியேற்ற உத்திகளை வரையறுக்கலாம்.
- Stop Loss ஆர்டர்கள் மற்றும் நிலை அளவு நிர்ணயத்துடன் அபாய மேலாண்மையைப் பயிற்சி செய்யலாம்.
உண்மையான கணக்குக்கு எப்போது மாற வேண்டும்?
அனைவருக்கும் பொருந்தும் ஒரே பதில் இல்லை. ஆனால் நீங்கள் தயாராக இருக்கலாம் என்பதற்கான சில அறிகுறிகள் இங்கே:
- ஓர் உத்தியை வெற்றிகரமாகச் சோதித்துள்ளீர்கள் (உங்கள் வர்த்தகங்களில் 50% க்கு மேல் லாபம் ஈட்டியுள்ளீர்கள்).
- உங்கள் நிதியை நன்றாக நிர்வகிக்கிறீர்கள், அபாய மேலாண்மையையும் புரிந்துகொள்கிறீர்கள்.
- உணர்ச்சிகள் உங்கள் முடிவுகளைக் கட்டுப்படுத்த விடாமல் உங்களால் வர்த்தகம் செய்ய முடிகிறது.
Quiz
டெமோ வர்த்தகக் கணக்கின் மிகப் பெரிய நன்மை என்ன?


