
சமீப ஆண்டுகளில் ஆன்லைன் வர்த்தகம் மிகவும் வேகமாக வளர்ந்துள்ளது, இதனால் யார் வேண்டுமானாலும் எளிதாக இதில் இணைய முடிகிறது. ஆனால் இது எளிதில் அணுகக்கூடியது என்பதற்காக, எந்தத் திட்டமும் இல்லாமல் உடனே இறங்கிவிடக் கூடாது. வர்த்தகத்தில் உண்மையான அபாயங்கள் உள்ளன. அபாய மேலாண்மை உத்திகளை அறிந்துகொண்டு, புத்திசாலி வர்த்தகர்கள் செயல்படுவதற்கு முன் எப்போதும் தயாராகிறார்கள்.
நீங்கள் இப்போதுதான் தொடங்குகிறீர்கள் என்றால், புத்திசாலித்தனமாக எப்படி வர்த்தகம் செய்வது? சரியான தொடக்கத்திற்கு உதவும் மூன்று முக்கிய விதிகள் இங்கே உள்ளன.
1. புரோக்கர்கள் மற்றும் சந்தைகள் பற்றி முன்கூட்டியே நன்கு அறிந்துகொள்ளவும்
வர்த்தகம் செய்வது பற்றி யோசிக்கும் முன்பே, இரண்டு விஷயங்களைச் சரியாகச் செய்ய வேண்டும்: சரியான புரோக்கரைத் தேர்ந்தெடுப்பது, சந்தைகளைப் புரிந்துகொள்வது.
சரியான புரோக்கரைத் தேர்ந்தெடுத்தல் சரியான வர்த்தகத் தளத்தைத் தேர்ந்தெடுத்தல்
எல்லா புரோக்கர்களும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. எனவே நேரம் எடுத்து, உங்கள் தேவைகளுக்குப் பொருந்தும் ஒருவரைக் கண்டறியவும். இவற்றைக் கவனிக்கவும்:
- நல்ல நற்பெயர் (சரிபார்க்கப்பட்ட பயனர்கள் அல்லது வர்த்தகச் சமூகங்களின் மதிப்புரைகளைப் படிக்கவும்)
- தொடக்கநிலையாளர்கள், நிபுணர்கள் இருவருக்கும் ஏற்ற, பயன்படுத்த எளிதான தளங்கள்
- பல்வேறு சொத்துகளில் வர்த்தகம் செய்யும் வசதி, இதனால் பல்வகைப்படுத்த உங்களுக்கு விருப்பத் தேர்வுகள் கிடைக்கும்
- உங்கள் நிதி பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய முறையான உரிமமும் ஒழுங்குமுறையும்
எடுத்துக்காட்டாக, Deriv இந்த அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்கிறது. இது பயன்படுத்த எளிதான வர்த்தகத் தளம், பல சொத்துத் தேர்வுகள் மற்றும் மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.
உங்கள் முதல் வர்த்தகச் சொத்தைத் தேர்ந்தெடுத்தல்
புரோக்கரைக் கண்டறிந்த பிறகு, அடுத்த படி எதில் வர்த்தகம் செய்வது என்பதை முடிவு செய்வதாகும். அந்நியச் செலாவணியா? பங்குகளா? கிரிப்டோவா? சரக்குகளா? ஒவ்வொரு சந்தைக்கும் அதற்கே உரிய அபாயங்களும் வாய்ப்புகளும் உள்ளன. இங்கே ஆய்வுதான் உங்களுக்குச் சிறந்த துணை. விலைப் போக்குகள், பொருளாதாரத் தாக்கங்கள் மற்றும் வெவ்வேறு சொத்துகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றி அறிந்துகொள்ளவும்.
இவை அனைத்தும் சற்றுக் குழப்பமாகத் தோன்றினால், Deriv தளத்தில் சின்தெடிக் சுட்டெண்களுடன் தொடங்கலாம். இந்தச் சொத்துகள் உண்மையான சந்தை நகர்வுகளைப் பின்பற்றுகின்றன, ஆனால் வெளிப்புறச் செய்தி நிகழ்வுகளால் பாதிக்கப்படுவதில்லை. இவற்றில் 24/7 வர்த்தகம் செய்யலாம். வார இறுதிகளிலும் பொது விடுமுறை நாட்களிலும்கூட வர்த்தகம் செய்யலாம், இது உங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது.
2. முதலில் டெமோ கணக்கில் பயிற்சி செய்யவும்
சில பாடங்கள் கற்காமல் நீங்கள் காரை ஓட்டமாட்டீர்கள், இல்லையா? வர்த்தகத்திற்கும் இதுவே பொருந்தும்.
உண்மையான பணத்தைப் பயன்படுத்தும் முன், டெமோ கணக்கைப் பயன்படுத்தி வர்த்தகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நன்கு அறிந்துகொள்ளவும். பெரும்பாலான புரோக்கர்கள் (Deriv உட்பட) மெய்நிகர் நிதியுடன் கூடிய டெமோ கணக்குகளை வழங்குகின்றனர். எனவே எந்த நிதி அபாயமும் இல்லாமல் உத்திகளைச் சோதித்து, அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளலாம்.
Deriv இன் டெமோ வர்த்தகக் கணக்கு உங்களுக்கு USD 10,000 மெய்நிகர் நிதியை வழங்குகிறது. இதன் மூலம் அபாயமின்றி பல்வேறு வர்த்தக உத்திகளை ஆராயலாம். இதன் சிறப்பு என்ன தெரியுமா? இது உண்மையான வர்த்தகக் கணக்கைப் போலவே செயல்படுகிறது. எனவே உண்மையான பணத்தில் வர்த்தகம் செய்யத் தயாராகும்போது, நீங்கள் முற்றிலும் புதியவர் போல உணர மாட்டீர்கள்.
3. செயல்முறையை அனுபவித்து, பொறுமையுடன் இருக்கவும்
வர்த்தகம் ஒரு குறுகிய ஓட்டப்பந்தயம் அல்ல; அது ஒரு மாரத்தான். சிறந்த வர்த்தகர்கள் ஒரே இரவில் அந்த நிலையை அடையவில்லை. அவர்கள் காலப்போக்கில் திறன்களை வளர்த்துக்கொண்டனர், தவறுகள் செய்தனர், அவற்றிலிருந்து கற்றுக்கொண்டனர், தங்கள் உத்திகளைச் செம்மைப்படுத்தினர்.
புத்திசாலி வர்த்தகர்களின் சில முக்கியப் பழக்கங்கள் இவை:
- பொறுமை. தூண்டுதலில் அவசரமாக வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம். உங்கள் திட்டத்திற்குப் பொருந்தும் வலுவான சூழ்நிலைக்காகக் காத்திருக்கவும்.
- ஒழுக்கம். உங்கள் வர்த்தக உத்தியைப் பின்பற்றவும், உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளைத் தவிர்க்கவும்.
- யதார்த்தமான எதிர்பார்ப்புகள். பெரிய லாபங்கள் ஒவ்வொரு நாளும் கிடைப்பதில்லை, இழப்புகளும் வர்த்தகத்தின் ஒரு பகுதியே.
விரைவாக முன்னேற வேண்டுமா? நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும்! அனுபவம் வாய்ந்த வர்த்தகர்களின் நுண்ணறிவுகளைப் பெற, Vince Stanzione எழுதிய வெற்றிகரமான நிதி வர்த்தகர்களின் 7 பண்புகள் என்பதைப் பார்க்கவும்.
Quiz
வர்த்தகத்தைத் தொடங்க சிறந்த வழி எது?


