முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்

சிறந்த 4 வர்த்தகப் பாணிகள்

5
நிமிட வாசிப்பு
ஸ்கால்பிங், நாள் வர்த்தகம், ஸ்விங் வர்த்தகம், நிலை வர்த்தகம் ஆகிய வர்த்தகப் பாணிகளால் சூழப்பட்ட ஒரு திசைகாட்டி—தேர்வைக் குறிக்கிறது.

வர்த்தகம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானது அல்ல. சில வர்த்தகர்கள் வேகமான செயல்பாட்டில் சிறந்து விளங்குகின்றனர்; மற்றவர்கள் மெதுவான, நிலையான அணுகுமுறையை விரும்புகின்றனர். உங்கள் வர்த்தகப் பயணத்தில் அதிகபட்சப் பலனைப் பெற, சரியான வர்த்தகப் பாணியைக் கண்டறிவது முக்கியம்.

இந்த வழிகாட்டியில், உங்கள் ஆளுமை, ஒதுக்கக்கூடிய நேரம், அபாயத்தை ஏற்கும் திறன் ஆகியவற்றுக்கு எந்தப் பாணி பொருந்தும் என்பதைக் கண்டறிய உதவ, நான்கு முக்கிய வர்த்தகப் பாணிகளை விளக்குகிறோம்.

வர்த்தகப் பாணி என்றால் என்ன?

வர்த்தகப் பாணி என்பது சந்தையை அணுகும் உங்கள் தனிப்பட்ட முறை போன்றது. நீங்கள் எவ்வளவு அடிக்கடி வர்த்தகம் செய்கிறீர்கள், நிலைகளை எவ்வளவு காலம் வைத்திருக்கிறீர்கள், எவ்வளவு அபாயத்தை ஏற்கத் தயாராக உள்ளீர்கள் என்பதை இது பிரதிபலிக்கிறது. இது வர்த்தக உத்தி என்பதிலிருந்து (இது குறிப்பிட்ட நுட்பங்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பானது) வேறுபட்டது. உங்கள் வர்த்தகப் பாணி உங்கள் வாழ்க்கை முறை, மனநிலை, நிதி இலக்குகளுடன் பொருந்த வேண்டும்.

சிறந்த பகுதி என்ன தெரியுமா? கடுமையான விதிகள் எதுவும் இல்லை! வெவ்வேறு பாணிகளை முயன்று பார்த்து, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கலாம். மிகவும் பொதுவான நான்கு வர்த்தகப் பாணிகளைப் பார்ப்போம்.

1. நாள் வர்த்தகம்: வேகமானது, பரபரப்பானது

Large 3D number "24" in front of red and white bar charts, representing the fast-paced nature of 24-hour day trading activity.

விரைவான முடிவெடுப்பை விரும்பி, நாளை எந்த நிலையும் இல்லாமல் முடிக்க விரும்பினால், இது உங்களுக்கானது.

செயல்படும் விதம் ஏற்றவர்கள் சவால்கள்
ஒரே நாளுக்குள் வர்த்தகங்கள் திறக்கப்பட்டு மூடப்படும்; இரவு முழுவதும் தொடரும் நிலைகள் எதுவும் இருக்காது. வேகமான செயல்பாட்டை விரும்பும் பரபரப்பு விரும்பிகள் சந்தையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
குறுகியகால விலை நகர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். முழுநேர வர்த்தகர்கள் மனதளவில் சோர்வூட்டக்கூடியது
தொழில்நுட்பப் பகுப்பாய்வும் விரைவான முடிவெடுப்பும் தேவை. அழுத்தத்தில் சிறப்பாகச் செயல்படுபவர்கள் வலுவான அபாய மேலாண்மைத் திறன்கள் தேவை

‍

2. ஸ்கால்பிங்: மின்னல் வேக நுழைவுகளும் வெளியேற்றங்களும்!

Illustration representing day scalping as a trading style.

விரைவான லாபங்களின் பரபரப்பை விரும்புகிறீர்களா? ஸ்கால்பிங் உங்கள் பாணியாக இருக்கலாம்.

செயல்படும் விதம் ஏற்றவர்கள் சவால்கள்
ஒரே நாளில் டஜன் கணக்கில் அல்லது நூற்றுக்கணக்கில் வர்த்தகங்கள் செய்யப்படும். விரைவான முடிவெடுப்பை விரும்பும் வர்த்தகர்கள் அதிக அழுத்தமான சூழல்
மிகச் சிறிய விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து லாபம் ஈட்டலாம். குறுகிய நேரத்துக்கு முழுக் கவனத்தைச் செலுத்தக்கூடியவர்கள் மிக வேகமான எதிர்வினை தேவை
துல்லியம், வேகம், ஒழுக்கம் ஆகியவை தேவை. அதிக எண்ணிக்கையிலான வர்த்தகங்களை விரும்புபவர்கள் பரிவர்த்தனைச் செலவுகள் விரைவாகக் கூடிவிடலாம்

‍

3. நிலை வர்த்தகம்: பொறுமையான வர்த்தகரின் கனவு

Illustration representing position trading as a trading style.

நீண்டகால வர்த்தகங்களையும் பெரிய சித்திரச் சிந்தனையையும் விரும்பினால், நிலை வர்த்தகம் உங்களுக்குப் பொருந்தலாம்.

செயல்படும் விதம் ஏற்றவர்கள் சவால்கள்
வர்த்தகங்கள் வாரங்கள், மாதங்கள், ஏன் ஆண்டுகள் வரை வைத்திருக்கப்படும். நீண்டகாலப் போக்குகளை விரும்பும் வர்த்தகர்கள் அதிகப் பொறுமை தேவை
தினசரி விலை ஏற்ற இறக்கங்களைவிட முக்கிய சந்தைப் போக்குகளில் கவனம் செலுத்தப்படும். தினமும் வர்த்தகம் செய்ய விரும்பாதவர்கள் மூலதனம் நீண்ட காலத்துக்கு முடங்கியிருக்கும்
முடிவுகளை எடுக்க அடிப்படைப் பகுப்பாய்வு பயன்படுத்தப்படும். ‘வாங்கி வைத்திருத்தல்’ உத்திகளை விரும்பும் வர்த்தகர்கள் சந்தை மாற்றங்கள் நிகழ நேரம் எடுக்கும்

‍

4. ஸ்விங் வர்த்தகம்: இரண்டிலும் சிறந்தது

 Illustration representing swing trading as a trading style.

வேகத்துக்கும் உத்திக்கும் இடையே சமநிலை வேண்டுமா? ஸ்விங் வர்த்தகம் உங்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கலாம்.

செயல்படும் விதம் ஏற்றவர்கள் சவால்கள்
வர்த்தகங்கள் சில நாட்கள் முதல் வாரங்கள் வரை வைத்திருக்கப்படும். நெகிழ்வுத்தன்மையை விரும்பும் வர்த்தகர்கள் அமைப்புகளுக்காகக் காத்திருக்கப் பொறுமை தேவை
குறுகிய முதல் நடுத்தரகால விலை நகர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளும். தொழில்நுட்பப் பகுப்பாய்வை விரும்புபவர்கள் சந்தைகளை முன்கூட்டியே கணிக்க முடியாது
விலை சரிவுகளில் வாங்குவதும் உச்சங்களில் விற்பதும் இதில் அடங்கும். போக்குகளைக் கண்டறிவதை விரும்புபவர்கள் இரவு முழுவதும் நிலையை வைத்திருப்பது எதிர்பாராத நிகழ்வுகளுக்கு உங்களை உள்ளாக்கும்

‍

எந்த வர்த்தகப் பாணி உங்களுக்கு மிகவும் ஏற்றது?

இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றால், கண்டறிய ஒரு விரைவான வழி இதோ:

  • வேகமான செயல்பாட்டை விரும்புகிறீர்களா? → ஸ்கால்பிங் அல்லது நாள் வர்த்தகத்தை முயற்சிக்கவும்
  • மிகவும் நிதானமான அணுகுமுறையை விரும்புகிறீர்களா? → நிலை வர்த்தகம் உங்களுக்கு ஏற்றது
  • இரண்டுக்கும் இடைப்பட்ட ஒன்று வேண்டுமா? → ஸ்விங் வர்த்தகம் உங்களுக்குச் சிறந்த தேர்வாக இருக்கலாம்

நல்ல செய்தி என்ன தெரியுமா? Deriv தளத்தில், இலவச டெமோ கணக்கைப் பயன்படுத்தி நான்கு பாணிகளையும் பரிசோதிக்கலாம். அவற்றைச் சோதித்து, உங்களுக்குப் பொருத்தமான பாணியைக் கண்டறிந்து, நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்யவும்.

 இன்றே உங்கள் இலவச Deriv டெமோ கணக்கை உருவாக்கி, USD 10,000 மெய்நிகர் பணத்துடன் அபாயமின்றிப் பயிற்சி செய்யவும்!

Quiz

நாள் முழுவதும் பல வர்த்தகங்களைச் செய்து, மிகச் சிறிய விலை மாற்றங்களில் இருந்து லாபம் ஈட்டுவதற்காக, பொதுவாக நிலைகளை சில விநாடிகள் அல்லது நிமிடங்கள் மட்டுமே வைத்திருக்கும் வர்த்தக பாணி எது?

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Analyse markets with AI-powered insights

Explore TradersView
WhatsApp