முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
பாடம்
4
Deriv MT5 | தொடக்கநிலை

MT5 ஆர்டர் வகைகள்: தொடக்கநிலையாளர்களுக்கான முழுமையான புரிதல்

கால அளவு
3
நிமிடங்கள்

Deriv MT5 தளத்தில் உள்ள பல்வேறு ஆர்டர் வகைகளைப் புரிந்துகொள்வது ஒவ்வொரு ஃபாரெக்ஸ் வர்த்தகருக்கும் மிக முக்கியமானது. இந்தப் பாடம் வீடியோவில் வழங்கப்பட்ட தகவல்களை விரிவாக்கி, MT5 தளத்தில் கிடைக்கும் பல்வேறு ஆர்டர் வகைகள், அவற்றின் செயல்பாடுகள், அவை உங்கள் வர்த்தக உத்திகளை எவ்வாறு மேம்படுத்தும் என்பதை ஆழமாக விளக்குகிறது. இந்த ஆர்டர் வகைகளில் தேர்ச்சி பெற்றால், நீங்கள் மேலும் திறம்பட வர்த்தகம் செய்யவும், சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொள்ளவும் முடியும்.
‍

சந்தை ஆர்டர்கள்: வேகமும் செயல்படுத்தலும்

வீடியோவில் குறிப்பிட்டபடி, சந்தை ஆர்டர் விலையை விடச் செயல்படுத்தும் வேகத்துக்கு முன்னுரிமை அளிக்கிறது. நீங்கள் சந்தை ஆர்டரை இடும்போது, கிடைக்கக்கூடிய சிறந்த சந்தை விலையில் வாங்கியோ விற்றோ MT5 உங்கள் வர்த்தகத்தை நிறைவேற்றும். சந்தை ஆர்டரின் முக்கிய நன்மை, உங்கள் ஆர்டர் விரைவாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகும். வேகமாக மாறும் சந்தைகளில் இது மிகவும் அவசியம்.

இருப்பினும், சந்தை ஆர்டர்கள் செயல்படுத்தலை உறுதி செய்தாலும், ஆர்டர் நிறைவேறும் துல்லியமான விலையை உறுதி செய்வதில்லை என்பதை அறிந்திருப்பது அவசியம். எடுத்துக்காட்டாக, நீங்கள் EUR/USD வாங்க விரும்பி, சந்தை விலை USD 1.1250 ஆக இருந்தால், சந்தை மாறியிருக்கும் பட்சத்தில் USD 1.1252 விலையில் வாங்க நேரலாம். சந்தை ஆர்டர்களைப் பயன்படுத்தும்போது விலை ஏற்ற இறக்கங்களுக்குப் பழகியிருப்பது முக்கியம்.

‍


நிலுவை ஆர்டர்கள்: உத்திசார் வர்த்தகம்

நிலுவை ஆர்டர்கள் வர்த்தகர்களுக்கு உத்திசார் நன்மையை வழங்குகின்றன. சந்தையில் நுழைய விரும்பும் குறிப்பிட்ட விலை நிலைகளை அமைக்க இவை அனுமதிக்கின்றன. உடனடியாகச் செயல்படுத்தப்படும் சந்தை ஆர்டர்களைப் போலன்றி, முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட சந்தை நிலைமைகள் பூர்த்தியாகும் வரை நிலுவை ஆர்டர்கள் காத்திருக்கும்.

  1. Buy Limit ஆர்டர்கள்: தற்போதைய சந்தை விலைக்குக் கீழே அமைக்கப்படும் Buy Limit ஆர்டர்கள், தற்போதைய சந்தை விலையை விடக் குறைந்த விலையில் ஒரு சொத்தை வாங்க வர்த்தகர்களை அனுமதித்து, நுழைவுச் செலவைக் குறைக்கின்றன.

  2. Sell Limit ஆர்டர்கள்: இவை தற்போதைய சந்தை விலைக்கு மேலே அமைக்கப்பட்டு, விலை முன்கூட்டியே நிர்ணயித்த நிலைக்கு உயரும்போது செயல்படுத்தப்படும்.
  3. Buy Stop ஆர்டர்கள்: வர்த்தகர்கள் மேல்நோக்கிய நகர்வை எதிர்பார்க்கும்போது பயன்படுத்தப்படும் Buy Stop ஆர்டர்கள், தற்போதைய சந்தை விலைக்கு மேலே இடப்பட்டு, விலை அந்த நிலையை அடைந்ததும் செயல்படுத்தப்படும்.

  4. Sell Stop ஆர்டர்கள்: Buy Stop ஆர்டர்களைப் போலவே பயன்படுத்தப்படும் இவை, தற்போதைய சந்தை விலைக்குக் கீழே இடப்பட்டு, விலை அந்த நிலைக்குக் குறையும்போது செயல்படுத்தப்படும்.

  5. Buy Stop Limit ஆர்டர்கள்: இந்த ஆர்டர் Buy Stop ஆர்டர் மற்றும் Limit ஆர்டரின் அம்சங்களை இணைக்கிறது. விலை குறிப்பிட்ட Stop விலைக்கு உயரும்போது இது தூண்டப்படும். ஆனால் அதன்பிறகு விலை நீங்கள் அமைத்த Limit விலைக்குத் திரும்பக் குறைந்தால் மட்டுமே ஆர்டர் செயல்படுத்தப்படும். இது உங்கள் நுழைவின் மீது இன்னும் துல்லியமான கட்டுப்பாட்டை வழங்குகிறது.

    எடுத்துக்காட்டாக, EUR/USD இல் மேல்நோக்கிய நகர்வை நீங்கள் எதிர்பார்த்து, ஆனால் குறிப்பிட்ட நுழைவு விலையை உறுதி செய்ய விரும்பினால், Stop விலை USD 1.1300 மற்றும் Limit விலை USD 1.1280 கொண்ட Buy Stop Limit ஆர்டரை அமைக்கலாம். EUR/USD விலை USD 1.1300 ஐ எட்டும்போது உங்கள் ஆர்டர் செயலாக்கத்துக்கு வரும். ஆனால் விலை மீண்டும் USD 1.1280 அல்லது அதற்குக் கீழே குறைந்தால் மட்டுமே அது செயல்படுத்தப்படும்.

  6. Sell Stop Limit ஆர்டர்கள்: இந்த ஆர்டர் வகை Buy Stop Limit ஆர்டரைப் போலவே செயல்படுகிறது. சொத்து குறிப்பிட்ட Stop விலையை எட்டியதும் Sell ஆர்டரைத் தூண்டும். ஆனால் விலை மீண்டும் முன்கூட்டியே நிர்ணயித்த Limit விலைக்கு உயர்ந்தால் மட்டுமே அது செயல்படுத்தப்படும்.

    எடுத்துக்காட்டாக, EUR/USD விலை USD 1.1200 க்குக் கீழே சென்றால் அதை விற்க நீங்கள் விரும்பினால், Stop விலை USD 1.1200 மற்றும் Limit விலை USD 1.1190 கொண்ட Sell Stop Limit ஆர்டரை அமைக்கலாம். உங்கள் ஆர்டர் USD 1.1200 இல் தூண்டப்படும். ஆனால் விலை மீண்டும் குறைந்தது USD 1.1190 ஐ எட்டினால் மட்டுமே அது செயல்படுத்தப்படும். இது வர்த்தகர்களுக்கு மேலும் கட்டுப்படுத்தப்பட்ட நுழைவுப் புள்ளியை உறுதி செய்கிறது.

    ‍
MT5 order type dropdown menu displaying market execution and pending order options including buy limit, sell stop, and stop limit

Take Profit, Stop Loss மற்றும் Trailing Stop ஆர்டர்கள்

ஃபாரெக்ஸ் வர்த்தகத்தில் அபாயத்தை நிர்வகிப்பது மிக முக்கியம். நிலைகளிலிருந்து வெளியேறுவது தொடர்பான ஆர்டர் வகைகள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

  1. Take Profit ஆர்டர்கள்: சொத்து குறிப்பிட்ட விலையை அடையும்போது இந்த ஆர்டர்கள் நிலையைத் தானாக மூடி, லாபத்தைப் பாதுகாக்கும். Buy நிலைக்கு, Take Profit தற்போதைய ask விலைக்கு மேலே அமைக்கப்படும். Sell நிலைக்கு, அது தற்போதைய bid விலைக்குக் கீழே அமைக்கப்படும்.
    ‍
  2. Stop Loss ஆர்டர்கள்: இழப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த ஆர்டர்கள், சந்தை உங்களுக்கு எதிராக நகரும்போது நிலையைத் தானாக மூடும். Take Profit ஆர்டர்களைப் போலவே, Buy நிலைக்கான Stop Loss தற்போதைய bid விலைக்குக் கீழேயும், Sell நிலைகளுக்கு ask விலைக்கு மேலேயும் இடப்படும்.
    ‍
  3. Trailing Stop Loss: சந்தை உங்களுக்குச் சாதகமாக நகரும்போது, இந்த மாறும் ஆர்டர் உங்கள் stop loss நிலையைச் சரிசெய்கிறது. எடுத்துக்காட்டாக, 20 points தூரத்தில் trailing stop loss அமைத்து விலை உயர்ந்தால், அமைக்கப்பட்ட தூரத்தைப் பராமரித்தபடி stop loss விலையைப் பின்தொடர்ந்து மேலே செல்லும். இந்த உத்தி லாபத்தை உறுதிப்படுத்திக்கொள்ள உதவுவதுடன், மேலும் கிடைக்கக்கூடிய லாபங்களுக்கும் இடமளிக்கிறது.
    ‍

முடிவுரை: திறம்பட வர்த்தகம் செய்ய ஆர்டர் வகைகளில் தேர்ச்சி பெறுதல்

MT5 இன் பல்வேறு ஆர்டர் வகைகளைப் புரிந்துகொள்வது திறம்பட வர்த்தகம் செய்வதற்கான அடிப்படைத் திறனாகும். சந்தை ஆர்டர்கள், நிலுவை ஆர்டர்கள், மற்றும் Take Profit, Stop Loss போன்ற வெளியேறும் உத்திகளில் தேர்ச்சி பெற்றால், உங்கள் வர்த்தகங்களை நிர்வகிக்கவும் சந்தை ஏற்ற இறக்கங்களைச் சமாளிக்கவும் நீங்கள் சிறப்பாகத் தயாராக இருப்பீர்கள். இந்த அறிவுடன், வர்த்தகங்களைத் தடையின்றிச் செயல்படுத்தவும் வலுவான வர்த்தக உத்தியை உருவாக்கவும் நீங்கள் சரியான பாதையில் உள்ளீர்கள்.

‍

Quiz

Forex வர்த்தகத்தில் சந்தை ஆர்டரின் முக்கிய நன்மை என்ன?

பை லிமிட் ஆர்டர் எவ்வாறு செயல்படுகிறது?

Trailing Stop Loss ஆர்டர் என்ன செய்கிறது?

Analyse markets with AI-powered insights

Explore TradersView
WhatsApp