Deriv MT5 உடன் வர்த்தகத்தைத் தொடங்குங்கள்: ஆர்டர் வகைகள் பகுதி 1
Deriv MT5 பற்றிய எங்கள் பாடநெறிக்கு மீண்டும் வருக! இந்தப் பாடத்தில், தளத்தில் கிடைக்கும் பல்வேறு ஆர்டர் வகைகளை ஆராய்வோம். இவை பயனுள்ள வர்த்தகத்துக்கு அடிப்படையானவை. இந்த ஆர்டர்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். ஏனெனில் நீங்கள் வர்த்தகங்களில் நுழைவதையும் வெளியேறுவதையும் அவையே தீர்மானிக்கின்றன, இது இறுதியில் உங்கள் வர்த்தக முடிவுகளைப் பாதிக்கிறது.
கிடைக்கும் ஆர்டர் வகைகள்
Deriv MT5 இரண்டு முதன்மை ஆர்டர் வகைகளை வழங்குகிறது: சந்தை ஆர்டர்கள் மற்றும் நிலுவையில் உள்ள ஆர்டர்கள். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான வர்த்தகத் தேவைகளுக்குப் பயன்படுகின்றன. மேம்பட்ட ஆர்டர் வகைகள்.
சந்தை ஆர்டர்கள்
சந்தை ஆர்டர் வேகத்தை மையமாகக் கொண்டது. நீங்கள் சந்தை ஆர்டரை வைக்கும்போது, தற்போது கிடைக்கும் சிறந்த சந்தை விலையில் உடனடியாக வாங்குவதன் அல்லது விற்பதன் மூலம் Deriv MT5 தளம் அதை நிறைவேற்றுகிறது. இங்கு முக்கியத்துவம் நிறைவேற்ற வேகத்துக்கே. அதாவது, உங்கள் ஆர்டர் நிறைவேறும் சரியான விலையின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இல்லாமல் போகலாம்.
எடுத்துக்காட்டு: தற்போதைய விலையான USD 1.1250 இல் EUR/USD இன் 1 லாட்டை வாங்க விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் சந்தை ஆர்டரை செயல்படுத்தினாலும், அது நிறைவேறுவதற்கு முன் விலை USD 1.1252 ஆக மாறினால், உங்கள் வர்த்தகம் புதிய சந்தை விலையில் செயல்படுத்தப்படும். குறிப்பாக வேகமாக நகரும் சந்தைகளில், சந்தை ஆர்டர்கள் நிறைவேற்றத்துக்கு உத்தரவாதம் அளிக்கின்றன, ஆனால் விலைக்கு அவசியம் உத்தரவாதம் அளிப்பதில்லை என்பதை இது காட்டுகிறது.
நிலுவையில் உள்ள ஆர்டர்கள்
நிலுவையில் உள்ள ஆர்டர்கள், குறிப்பிட்ட சந்தை நிலைமைகள் பூர்த்தியாகும் வரை காத்திருந்து, வர்த்தகங்களில் மேலும் உத்திசார்ந்த முறையில் நுழைய உதவுகின்றன. நிலுவையில் உள்ள ஆர்டர்களில் பல வகைகள் உள்ளன:
- Buy Limit ஆர்டர்: தற்போதைய சந்தை விலைக்குக் கீழே நிர்ணயிக்கப்படுகிறது. சந்தை இந்த விலைக்கு வீழ்ந்தால் இந்த ஆர்டர் செயல்படுத்தப்படும். இதன் மூலம் நீங்கள் சிறந்த விலையில் வாங்கலாம்.
- Sell Limit ஆர்டர்: தற்போதைய சந்தை விலைக்கு மேலே நிர்ணயிக்கப்படுகிறது. சந்தை இந்த விலைக்கு உயர்ந்தால் இந்த ஆர்டர் செயலுக்கு வரும். இதன் மூலம் நீங்கள் அதிக விலையில் விற்கலாம்.
- Buy Stop ஆர்டர்: இந்த ஆர்டர் தற்போதைய சந்தை விலைக்கு மேலே வைக்கப்படுகிறது. விலை ஸ்டாப் நிலையைத் தாண்டும்போது இது செயலுக்கு வரும். இது சாத்தியமான உயர்வுப் போக்கைக் குறிக்கிறது.
- Sell Stop ஆர்டர்: இந்த ஆர்டர் தற்போதைய சந்தை விலைக்குக் கீழே நிர்ணயிக்கப்படுகிறது. விலை குறிப்பிட்ட நிலைக்குக் கீழே வீழ்ச்சியடையும்போது இது செயல்படுத்தப்படும். இது சாத்தியமான வீழ்ச்சிப் போக்கைக் குறிக்கிறது.
முடிவுரை
இந்தப் பகுதியில், சந்தை ஆர்டர்கள் மற்றும் நிலுவையில் உள்ள ஆர்டர்கள் உட்பட Deriv MT5 இல் உள்ள முதன்மை ஆர்டர் வகைகளைப் பார்த்தோம். இந்த ஆர்டர்களை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்வது, உங்கள் வர்த்தகச் செயல்பாடுகளில் உங்களுக்குக் குறிப்பிடத்தக்க முன்னிலையை அளிக்கும்.
Quiz
அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் சந்தை ஆர்டரை வரையறுக்கும் அம்சம் எது?
Buy Limit ஆர்டர் என்றால் என்ன?


