முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
பாடம்
3
Deriv MT5 | தொடக்கநிலை

Deriv MT5 உடன் வர்த்தகத்தைத் தொடங்கவும்: Market Watch

கால அளவு
8
நிமிடங்கள்

Deriv MT5 குறித்த எங்கள் பாடநெறிக்கு மீண்டும் வரவேற்கிறோம்! இந்தப் பாடத்தில் Market Watch பற்றி விரிவாகப் பார்ப்போம். ஃபாரெக்ஸ் மற்றும் பிற வர்த்தகச் சந்தைகளில் திறம்பட செயல்பட உதவும் முக்கிய அம்சம் இதுவாகும். Market Watch அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொண்டால், விலை நகர்வுகளைக் கண்காணிக்கவும், தெளிவான முடிவுகளுடன் வர்த்தகம் செய்யவும் உங்களால் முடியும்.

‍

Market Watch என்றால் என்ன?

Market Watch என்பது, Deriv MT5 தளத்தில் வர்த்தகத்திற்குக் கிடைக்கும் கரன்சிகள், பங்குகள், கமாடிட்டிஸ் போன்ற அனைத்து வர்த்தகக் கருவிகளின் நேரடி விலைக் குறிப்புகளை நீங்கள் காணக்கூடிய இடமாகும். இதை உங்களுக்கே உரிய கண்காணிப்புப் பட்டியலாக நினைத்துக்கொள்ளலாம். நீங்கள் ஆர்வம் காட்டும் அனைத்தையும் ஒரே வசதியான இடத்திலிருந்து எளிதாகக் கண்காணிக்க இது உதவுகிறது.
‍

Market Watch இன் முக்கிய அம்சங்கள்

  1. Symbols தாவல்: Market Watch ஐத் திறக்கும்போது நீங்கள் முதலில் காண்பது இந்தத் தாவலைத்தான். இது வர்த்தகத்திற்குக் கிடைக்கும் அனைத்துக் கருவிகளின் பட்டியலையும் காட்டுகிறது. இந்தப் பட்டியலைத் தனிப்பயனாக்க, Symbols தாவலுக்குள் வலது கிளிக் செய்து “Symbols” என்பதைத் தேர்ந்தெடுத்து, symbols சாளரத்தைத் திறக்கவும். பின்னர் “Specifications” பகுதிக்குச் சென்று, உங்கள் கண்காணிப்புப் பட்டியலில் உள்ள கருவிகளைப் பார்க்கவும், சேர்க்கவும் அல்லது நீக்கவும். சேர்க்க விரும்பும் கருவிகளுக்கு “Show Symbol” என்பதையும், நீக்க விரும்பும் கருவிகளுக்கு “Hide Symbol” என்பதையும் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் கண்காணிப்புப் பட்டியலைப் பொருத்தமானதாக வைத்திருக்கலாம்.
    ‍
  2. பார்கள் மற்றும் டிக்குகள்: Market Watch இல் “Bars” மற்றும் “Ticks” காட்சிகளுக்கு இடையே நீங்கள் மாறலாம்:
    • பார்கள்: இந்தக் காட்சி, தேர்ந்தெடுத்த கால அளவில் (எ.கா., 1 நிமிடம், ஒரு மணிநேரம், ஒரு நாள்) விலை நகர்வுகளைப் பார்களாகக் காட்டுகிறது. ஒவ்வொரு பாரிலும் உள்ள தொடக்க, அதிகபட்ச, குறைந்தபட்ச மற்றும் இறுதி விலைகளை ஆராய்வதன் மூலம், சந்தைப் போக்குகள், ஏற்ற இறக்கம் மற்றும் முக்கிய ஆதரவு, எதிர்ப்பு நிலைகள் பற்றிய தெளிவைப் பெறலாம்.
      ‍
    • டிக்குகள்: நீங்கள் தேர்ந்தெடுத்த கால அளவுக்கு ஏற்ப தனித்தனி விலை மாற்றங்களை இந்த அம்சம் காட்டுகிறது. இதன் மூலம் நிமிடத்துக்கு நிமிடம் ஏற்படும் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்காணிக்கலாம்.
      ‍
  3. கருவிகளைச் சேர்த்தல்: கிடைக்கும் அனைத்துக் கருவிகளையும் உங்கள் கண்காணிப்புப் பட்டியலில் விரைவாகச் சேர்க்க, Symbols தாவலுக்குள் வலது கிளிக் செய்து “Show All” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் அனைத்துக் கருவிகளையும் எளிதாகக் கண்காணிக்கலாம்.
    ‍
  4. நெடுவரிசைகளைத் தனிப்பயனாக்குதல்: விலைகளுடன் கூடுதல் விவரங்களையும் காட்டும்படி உங்கள் கண்காணிப்புப் பட்டியலை மாற்றியமைக்கலாம். உதாரணமாக, விலைகளுடன் ஸ்பிரெட்டையும் பார்க்க விரும்பினால், Symbols தாவலில் எங்கு வேண்டுமானாலும் வலது கிளிக் செய்து, “Columns” மீது கர்சரை வைத்து, “Spread” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்தத் தனிப்பயனாக்கம், உங்கள் வர்த்தக உத்திக்கு மிகவும் பொருத்தமான தகவலைப் பார்க்க உதவுகிறது.
    ‍
  5. Details தாவல்: தேர்ந்தெடுத்த கருவி பற்றிய விரிவான தகவலை Details தாவல் வழங்குகிறது. தொடக்க மற்றும் இறுதி விலைகள், தினசரி அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச விலைகள் போன்ற முக்கியத் தரவுகளும், பிற தொடர்புடைய வர்த்தக விவரங்களும் இதில் அடங்கும். இவை உங்கள் பகுப்பாய்வுக்கும் முடிவெடுக்கும் செயல்முறைக்கும் உதவுகின்றன.
    ‍
  6. Trading தாவல்: நிலைகளைத் திறக்கும் செயல்முறையை இந்தத் தாவல் எளிதாக்குகிறது. நீங்கள் விரும்பும் வர்த்தக அளவை உள்ளிட்டு, வர்த்தகம் செய்ய விரும்பும் திசையைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் வர்த்தகங்களைத் திறம்பட செயல்படுத்துவதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் இது வழங்குகிறது.
    ‍
  7. டிக் தாவல்: இந்தப் பகுதி தேர்ந்தெடுத்த கருவிக்கான நிகழ்நேர டிக் தரவைக் காட்டுகிறது. ஒவ்வொரு டிக்கிற்கும் Bid மற்றும் Ask விலைகளையும் இது காட்டுகிறது. விரைவான விலை நகர்வுகளைச் சார்ந்த scalping அல்லது பிற குறுகியகால உத்திகளைப் பயன்படுத்தும் வர்த்தகர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகும்.
    ‍
  8. Symbol Specification: ஒவ்வொரு வர்த்தகக் கருவியின் விரிவான விவரக்குறிப்புகளைப் பார்க்க, Symbols, Details அல்லது Trading தாவலுக்குள் வலது கிளிக் செய்து, சூழல் மெனுவில் “Specification” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே ஒப்பந்த அளவு, டிக் மதிப்பு, ஸ்வாப் விகிதங்கள், வர்த்தக நேரங்கள் மற்றும் பிற தொடர்புடைய நிபந்தனைகள் பற்றிய தகவலைக் காணலாம்.

முடிவுரை

Market Watch இன் பல்வேறு அம்சங்களையும், அவற்றை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது என்பதையும் இப்போது நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே பயிற்சி செய்ய உங்கள் Deriv MT5 டெமோ கணக்கில் உள்நுழையவும். உங்களுக்கு மிகவும் விருப்பமான கருவிகளுடன் உங்கள் கண்காணிப்புப் பட்டியலைத் தனிப்பயனாக்கி, நிகழ்நேர விலைக் குறிப்புகள் மற்றும் மதிப்புமிக்க சந்தைத் தகவல்களுடன் பழகிக்கொள்ளவும்.

Market Watch ஐப் பயன்படுத்துவது உங்கள் வர்த்தகச் செயல்பாடுகளைக் கணிசமாக மேம்படுத்தும். மேலும் விரிவான சந்தைத் தரவின் அடிப்படையில் தெளிவான முடிவுகளை எடுக்கவும் உதவும். இன்னும் பல பாடங்களுக்காக எங்களுடன் தொடர்ந்து இணைந்திருக்கவும். மகிழ்ச்சியான வர்த்தகம் அமையட்டும்!

‍

Quiz

Deriv MT5 தளத்தில் Market Watch அம்சத்தின் முதன்மைச் செயல்பாடு என்ன?

Symbols Tab இல் காட்டப்படும் instruments ஐ நீங்கள் எவ்வாறு தனிப்பயனாக்கலாம்?

விவரங்கள் தாவலில் எந்த வகையான தகவலை நீங்கள் காணலாம்?

Analyse markets with AI-powered insights

Explore TradersView
WhatsApp