Deriv MT5 உடன் வர்த்தகத்தைத் தொடங்குங்கள்: ஆர்டர் வகைகள் பகுதி 2
Deriv MT5 பாடநெறிக்கு மீண்டும் வரவேற்கிறோம்! இந்தப் பாடத்தில் ஆர்டர் வகைகளை மேலும் ஆராய்வோம். ஆர்டர் காலாவதி விருப்பங்கள் மற்றும் Take Profit, Stop Loss ஆர்டர்கள் உள்ளிட்ட அபாய மேலாண்மைக் கருவிகளில் கவனம் செலுத்துவோம். இந்தக் கருத்துகளில் தேர்ச்சி பெறுவது உங்கள் வர்த்தக உத்தியை மேம்படுத்தும். மேலும், உங்கள் வர்த்தகச் செயல்பாடுகள் மீது அதிகக் கட்டுப்பாட்டையும் வழங்கும்.
ஆர்டர் காலாவதி வகைகள்
நீங்கள் வைக்கும் ஒவ்வொரு ஆர்டருக்கும் ஒரு காலாவதி வகையைக் குறிப்பிடலாம் ஆர்டர் வகைகள் பகுதி 1. இது அந்த ஆர்டர் சந்தையில் எவ்வளவு நேரம் செயலில் இருக்கும் என்பதை வரையறுக்கிறது. Deriv MT5 தளத்தில் Deriv MT5 வர்த்தகத் தளம் கிடைக்கும் விருப்பங்கள் இவை:
- ரத்து செய்யப்படும் வரை செல்லுபடியாகும் (GTC): பெரும்பாலான ஆர்டர்களுக்கான இயல்புநிலை அமைப்பு இதுவே. அதாவது, உங்கள் ஆர்டர் நிறைவேறும் வரை அல்லது நீங்களாக ரத்து செய்யும் வரை செயலில் இருக்கும். தங்கள் ஆர்டர்கள் நீண்ட காலம் செயலில் இருக்க வேண்டும் என விரும்பும் வர்த்தகர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
- இன்று: இந்த விருப்பம் உங்கள் ஆர்டரின் செல்லுபடியை நடப்பு வர்த்தக நாளுக்கு மட்டும் வரையறுக்கிறது. நிறைவேறாத ஆர்டர்கள் சந்தை மூடப்படும்போது தானாகவே ரத்து செய்யப்படும். அன்றைய நாளுக்குள் நடக்கும் என நீங்கள் எதிர்பார்க்கும் வர்த்தகங்களுக்கு இது பொருத்தமானது.
- குறிப்பிட்ட நேரம்: இந்த விருப்பத்தில் உங்கள் ஆர்டருக்கு ஒரு குறிப்பிட்ட காலாவதி நேரத்தையும் தேதியையும் அமைக்கலாம். எதிர்பார்க்கப்படும் சந்தை நகர்வுகள் அல்லது பொருளாதார நிகழ்வுகளுடன் உங்கள் ஆர்டர்களைப் பொருத்த இது குறிப்பாக உதவும்.
- குறிப்பிட்ட நாள்: உங்கள் ஆர்டர் செயலில் இருக்க வேண்டிய ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்ந்தெடுக்க இந்த வசதி அனுமதிக்கிறது. அந்த நாளில் சந்தை மூடப்படும்போது ஆர்டர் தானாகவே ரத்து செய்யப்படும்.
Take Profit மற்றும் Stop Loss ஆர்டர்களுடன் அபாய மேலாண்மை அபாய மேலாண்மை உத்திகள்
வர்த்தகத்தில் பயனுள்ள அபாய மேலாண்மை மிக முக்கியமானது. இங்குதான் Take Profit மற்றும் Stop Loss ஆர்டர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
Take Profit ஆர்டர்
முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட லாப நிலையைச் சந்தை அடைந்தவுடன் உங்கள் நிலையைத் தானாகவே மூடுவதற்காக Take Profit ஆர்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாங்கும் நிலைகளுக்கு (long positions), Bid விலை நீங்கள் குறிப்பிட்ட நிலையில் அல்லது அதற்கு மேல் இருக்கும்போது ஆர்டர் செயல்படுத்தப்படும்.
எடுத்துக்காட்டு: யூரோ அமெரிக்க டாலருக்கு எதிராக வலுப்பெறும் என நீங்கள் எதிர்பார்த்து, USD 1.1250 விலையில் வாங்கும் ஆர்டரை வைத்தால், USD 1.1300 இல் Take Profit ஆர்டரை அமைக்கலாம். EUR/USD இந்த விலையை அடைந்தால், உங்கள் நிலை தானாகவே மூடப்பட்டு, உங்கள் லாபம் உறுதிசெய்யப்படும்.
Stop Loss ஆர்டர்
Stop Loss ஆர்டர் இழப்புகளைக் குறைக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாகச் செயல்படுகிறது. கருவியின் விலை குறிப்பிட்ட நிலையை அடையும்போது, Stop Loss ஆர்டர் உங்கள் நிலையைத் தானாகவே விற்கிறது. Take Profit ஆர்டர்களைப் போலவே, Stop Loss ஆர்டரையும் சந்தை ஆர்டர்களுடன் அல்லது நிலுவையில் உள்ள ஆர்டர்களுடன் தொடங்கலாம்.
எடுத்துக்காட்டு: EUR/USD சூழ்நிலையையே தொடர்ந்தால், நீங்கள் USD 1.1200 இல் Stop Loss ஆர்டரை அமைத்திருந்தால், விலை அந்த நிலைக்குக் குறையும்போது இந்த ஆர்டர் செயல்படும். இதனால் உங்கள் நிலை மூடப்பட்டு, இழப்புகள் கட்டுப்படுத்தப்படும்.
Trailing Stop Loss
வழக்கமான Stop Loss ஆர்டர்களுடன் கூடுதலாக, Trailing Stop Loss ஆர்டரையும் பயன்படுத்தலாம். இந்த ஆர்டர் சந்தை விலையுடன் சேர்ந்து நகர்ந்து, இழப்புகளைக் கட்டுப்படுத்திக்கொண்டே லாபத்தைப் பாதுகாக்கிறது. Stop Loss விலை தற்போதைய விலையிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புள்ளிகள் தொலைவில் அமைக்கப்படும். சந்தை சாதகமாக நகரும்போது அது மேல்நோக்கி (அல்லது கீழ்நோக்கி) சரிசெய்யப்படும்.
எடுத்துக்காட்டு: EUR/USD இல் USD 1.1250 விலையில் வாங்கும் நிலை உங்களிடம் இருந்து, 10 புள்ளிகள் கொண்ட trailing stop அமைத்திருந்தால், உங்கள் தொடக்க Stop Loss USD 1.1240 இல் இருக்கும். பின்னர் விலை USD 1.1270 ஆக உயர்ந்தால், உங்கள் Stop Loss USD 1.1260 ஆகச் சரிசெய்யப்படும். இது உங்கள் லாபத்தைப் பாதுகாக்க உதவும்.
முடிவுரை
சந்தை ஆர்டர்கள், நிலுவையில் உள்ள ஆர்டர்கள், பல்வேறு காலாவதி வகைகள் மற்றும் Take Profit, Stop Loss ஆர்டர்கள் போன்ற கருவிகளைப் புரிந்துகொள்வதன் மூலம், உங்கள் வர்த்தக உத்தியை மேம்படுத்தலாம். மேலும், உங்கள் அபாயத் தாங்கும் திறனுடனும் சந்தை நிலைமைகளுடனும் அதை நன்கு பொருத்தலாம். இந்தக் கருவிகளால் உங்கள் வர்த்தகச் செயல்பாடுகளை மிகவும் திறம்பட நிர்வகிக்க முடியும்.
அடுத்த பாடத்தில், Deriv MT5 தளத்தில் வர்த்தகம் செய்வதற்கான நடைமுறைப் படிகளை விளக்குவோம். இது நம்பிக்கையுடன் வர்த்தகங்களைச் செயல்படுத்த உங்களுக்கு உதவும். மகிழ்ச்சியான வர்த்தகம்!
Quiz
Take Profit ஆர்டரின் நோக்கம் என்ன?
Stop Loss ஆர்டர் எதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது?


