Deriv MetaTrader 5 (Deriv MT5) என்றால் என்ன?
Deriv MetaTrader 5 (Deriv MT5) என்பது ஒரே இடத்திலிருந்தே பல்வேறு நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்ய உங்களை அனுமதிக்கும் சக்திவாய்ந்த CFD வர்த்தக பிளாட்ஃபார்ம் ஆகும்.
இது வழங்குவது இதுதான்:
பல சந்தைகளுக்கான அணுகல் Forex, பங்குகள், பங்கு குறியீடுகள், சரக்குகள் / கமாடிட்டிஸ், கிரிப்டோகரன்சிகள் மற்றும் Derived indices ஆகியவற்றில் வர்த்தகம் செய்யுங்கள்.
CFD வர்த்தகம் நீங்கள் அடிப்படை சொத்தை வைத்திருப்பதில்லை. மாறாக, விலை நடமாட்டங்களின் அடிப்படையில் வர்த்தகம் செய்கிறீர்கள் — அதாவது, சந்தை உயரும் போதும், சரியும் போதும் நீங்கள் பயனடையக்கூடும்.
மேம்பட்ட வர்த்தக கருவிகள் உங்கள் வர்த்தகங்களை திறம்பட பகுப்பாய்வு செய்யவும் நிர்வகிக்கவும், விரிவான விளக்கப்படங்கள், தொழில்நுட்ப குறிகாட்டிகள், பல ஆர்டர் வகைகள் மற்றும் தானியங்கி உபாயங்களைப் பயன்படுத்துங்கள்.
அதிக கட்டுப்பாடு, நெகிழ்வுத்தன்மை மற்றும் பகுப்பாய்வு ஆழத்தை விரும்பும் இடைநிலை மற்றும் அனுபவமுள்ள வர்த்தகர்கள் இருவருக்கும் இந்த பிளாட்ஃபார்ம் ஏற்றது.






