
பங்குக் குறிகாட்டிகளைப் புரிந்துகொள்ளுதல்
வர்த்தகத்திற்கு ஒரு ரகசியக் குறியீடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா? அப்படியானால், RSI (Relative Strength Index) மற்றும் SMA (Simple Moving Averages) அதற்கு அடுத்த சிறந்த வழியாக இருக்கலாம்! பிரபலமான இந்த தொழில்நுட்பக் குறிகாட்டிகள், எப்போது வர்த்தகத்தில் நுழைய வேண்டும், எப்போது வெளியேற வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உதவும். இதை எளிமையாகப் பார்க்கலாம்.
RSI என்றால் என்ன?
RSI ஒரு பங்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளதா அல்லது அதிகமாக விற்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது. இது வரவிருக்கும் விலை மாற்றத்தைக் குறிக்கலாம். இது 0 முதல் 100 வரையிலான அளவுகோலில் செயல்படுகிறது:
- 70-க்கு மேல்? பங்கு அதிகமாக வாங்கப்பட்டிருக்கலாம்; விலை சற்றுக் குறைய வாய்ப்புள்ளது.
- 30-க்குக் கீழ்? பங்கின் மதிப்பு குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கலாம்; அது மீண்டும் உயரக்கூடும்.
- இயல்புநிலை அமைப்பு: 14 நாள் RSI. ஆனால் உங்கள் உத்திக்கு ஏற்ப இதை மாற்றியமைக்கலாம்.
SMA பற்றி என்ன?
SMA விலை நகர்வுகளைச் சீராக்கி, பெரிய போக்கைப் பார்க்க உதவுகிறது. மிகவும் பொதுவான இரண்டு SMA:
- 50 நாள் SMA: குறுகியகாலப் போக்கைக் காட்டும் குறிகாட்டி
- 200 நாள் SMA: நீண்டகாலப் போக்கைக் காட்டும் குறிகாட்டி
SMA குறுக்குவெட்டு உத்தி
கோல்டன் கிராஸ், டெத் கிராஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவை பின்வருமாறு உருவாகின்றன:
- கோல்டன் கிராஸ்: 50 நாள் SMA கோடு 200 நாள் SMA கோட்டுக்கு மேலே நகரும் → ஏற்றச் சமிக்ஞை
- டெத் கிராஸ்: 50 நாள் SMA கோடு 200 நாள் SMA கோட்டுக்கு கீழே நகரும் → இறக்கச் சமிக்ஞை
RSI மற்றும் SMA ஆகியவற்றை ஏன் ஒன்றாகப் பயன்படுத்த வேண்டும்?
போக்குகளையும் மாற்றங்களையும் கண்டறிவதில் RSI மற்றும் SMA ஒன்றையொன்று நன்கு நிறைவு செய்கின்றன. ஒவ்வொன்றும் தனியாகவே பயனுள்ளது. ஆனால் இரண்டும் சேரும்போது மிகத் தெளிவான படத்தை வழங்குகின்றன.
- RSI ஒரு பங்கின் விலை அதிகமாக உள்ளதா அல்லது குறைவான விலையில் கிடைக்கிறதா என்பதைச் சொல்கிறது.
- SMA குறுக்குவெட்டுகள் போக்கு எந்தத் திசையில் செல்கிறது என்பதைக் காட்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, RSI 30-க்குக் கீழே (அதிகமாக விற்கப்பட்ட நிலை) இருந்து, 50 நாள் SMA கோடு 200 நாள் SMA கோட்டுக்கு மேலே கடந்தால், அது வலுவான வாங்கும் சமிக்ஞையாகும்!

RSI மற்றும் SMA உத்திகள் சிறப்பாகச் செயல்படும் சூழ்நிலைகள்
வருவாய் அறிக்கைப் பருவம்
நிறுவனங்களின் வருவாய் அறிக்கைகள் விலையில் பெரிய ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தலாம். தேவையற்ற இரைச்சலை வடிகட்ட RSI மற்றும் SMA உதவுகின்றன:
- வருவாய் அறிவிப்பால் ஏற்பட்ட நகர்வுக்குப் பிறகு பங்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளதா அல்லது அதிகமாக விற்கப்பட்டுள்ளதா என்பதை RSI காட்டுகிறது.
- அந்த நகர்வு பெரிய போக்கின் ஒரு பகுதியா அல்லது குறுகியகாலப் பரபரப்பா என்பதை SMA குறுக்குவெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.
சந்தைத் திருத்தங்கள்
சந்தை கடுமையாகச் சரியும்போது, அதிகமாக விற்கப்பட்ட பங்குகளை RSI சுட்டிக்காட்டும். வாங்குவதற்கு இது சரியான நேரமா அல்லது இறக்கப் போக்கு தொடருமா என்பதை SMA உறுதிப்படுத்தும்.
உங்கள் RSI மற்றும் SMA வர்த்தகத்தை அமைத்தல்
ஏற்ற அமைப்பு (வாங்கும் வாய்ப்பு)
- RSI 30-ஐ நெருங்குகிறது (அதிகமாக விற்கப்பட்ட நிலை)
- 50 நாள் SMA கோடு 200 நாள் SMA கோட்டுக்கு மேலே கடக்கிறது (கோல்டன் கிராஸ்)
இறக்க அமைப்பு (விற்கும் வாய்ப்பு)
- RSI 70-ஐ நெருங்குகிறது (அதிகமாக வாங்கப்பட்ட நிலை)
- 50 நாள் SMA கோடு 200 நாள் SMA கோட்டுக்குக் கீழே கடக்கிறது (டெத் கிராஸ்)
RSI மற்றும் SMA குறுக்குவெட்டு எடுத்துக்காட்டு: Amazon (AMZN)
Amazon பங்கு வரைபடத்தைப் பார்க்கும்போது, பின்வருவன நிகழ்கின்றன என்று வைத்துக்கொள்வோம்:
- 50 நாள் SMA கோடு 200 நாள் SMA கோட்டுக்கு மேலே கடக்கிறது → ஏற்றப் போக்கு உறுதியாகிறது
- RSI 30-க்கு அருகில் உள்ளது → அதிகமாக விற்கப்பட்ட நிலையிலிருந்து விலை மாற வாய்ப்புள்ளது
இந்தச் சமிக்ஞைகள் ஒன்றாக இணைந்து வாங்கும் வாய்ப்பைக் குறிக்கின்றன.
RSI மற்றும் SMA வர்த்தகத்தில் அபாயத்தை நிர்வகித்தல்
Stop Loss அமைக்கும் இடம்
- வருவாய் அறிக்கைக் காலத்தில் ஏற்ற இறக்கமா? அகலமான Stop Loss பயன்படுத்தவும் (நுழைவு விலைக்குக் கீழே 2–3%).
- இயல்பான சூழ்நிலையா? அதை நெருக்கமாக வைக்கவும் (நுழைவு விலைக்குக் கீழே 1–1.5%).
- மேலும் துல்லியமான Stop Loss நிலைகளுக்கு, பங்கின் Average True Range (ATR) அளவைக் கவனத்தில் கொள்ளவும்.
லாப இலக்குகள்
- குறுகியகால வர்த்தகங்கள்: RSI 70-ஐ நெருங்கும்போது அல்லது SMA குறுக்குவெட்டு வலுவிழக்கும்போது Take Profit செய்யவும்.
- நீண்டகால வர்த்தகங்கள்: 50 நாள் SMA கோடு 200 நாள் SMA கோட்டுக்கு மேலே இருக்கும் வரை நிலையைத் தொடரவும். RSI தீவிர நிலைகளை எட்டும்போது படிப்படியாக விற்கவும்.
முக்கிய வர்த்தகக் குறிப்புகள்
வர்த்தகத்தில் நுழைவதற்கு முன், இவற்றைக் கவனத்தில் கொள்ளவும்:
- பல கால அளவுகள் (போக்குகளுக்கு தினசரி வரைபடங்கள், துல்லியமான நுழைவுகளுக்கு மணிநேர வரைபடங்கள்)
- சந்தை நிலவரம் (ஒட்டுமொத்த சந்தைத் திசை, துறைசார் போக்குகள், குறிப்பிட்ட பங்கு தொடர்பான செய்திகள்)
- வருவாய் அறிக்கை தேதிகள் (எதிர்பாராத மாற்றங்களைத் தவிர்க்க)
- பங்கின் பணப்புழக்கம் (அதிக வர்த்தக அளவு = சீரான வர்த்தகங்கள்)
இன்றே RSI மற்றும் SMA வர்த்தக உத்திகளைச் சோதிக்கத் தொடங்கவும்
இந்தக் குறிகாட்டிகள் சக்திவாய்ந்தவை. ஆனால் ஒரு பரந்த உத்தியின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தும்போது அவை சிறப்பாகச் செயல்படுகின்றன. இலவச Deriv டெமோ கணக்கு மூலம் RSI மற்றும் SMA உத்திகளைப் பயிற்சி செய்யவும். உண்மையான பணத்தில் வர்த்தகம் செய்வதற்கு முன் உங்கள் திறன்களை மேம்படுத்த இது சிறந்த வழியாகும்.
Quiz
ஏறுமுகப் போக்கை எது உறுதிப்படுத்துகிறது?


