
Contract for Difference (CFD) வர்த்தகம் செய்ய நினைக்கிறீர்களா, ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லையா? CFD வர்த்தகத்தை விரைவாகத் தொடங்குவதற்கான சிறந்த தளமான Deriv MT5 பற்றிப் பார்ப்போம். நீங்கள் தொடக்கநிலையாளரா அல்லது அனுபவமிக்க வர்த்தகரா என்பது முக்கியமல்ல. தகவலறிந்து வர்த்தகம் செய்ய தேவையான அனைத்தும் Deriv MT5 தளத்தில் உள்ளன.
உண்மையில் CFD வர்த்தகம் என்றால் என்ன?
CFD வர்த்தகத்தில், தங்கம் அல்லது பங்குகள் போன்ற ஒரு சொத்தை நீங்கள் சொந்தமாக வைத்திருப்பதில்லை. அதற்குப் பதிலாக, அதன் விலை உயருமா அல்லது குறையுமா என்பதைக் கணிக்கிறீர்கள். நீங்கள் சரியாகக் கணித்தால் லாபம் பெறுவீர்கள். இல்லையெனில் இழப்பு ஏற்படலாம். எளிதானது, இல்லையா? Deriv MT5 தளம் CFD வர்த்தகத்தை எளிதாகவும் சீராகவும் மாற்றுகிறது.
Deriv MT5 தளத்தில் ஏன் வர்த்தகம் செய்ய வேண்டும்?
Deriv MT5 என்பது உங்கள் வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட மற்றொரு வர்த்தகத் தளம் மட்டுமல்ல. வர்த்தகர்கள் இதை விரும்புவதற்கான காரணங்கள் இங்கே:
- பயன்படுத்த எளிது: நீங்கள் புதியவராக இருந்தாலும் அனுபவமிக்கவராக இருந்தாலும், அனைத்தையும் எளிதாகக் கண்டறிந்து பயன்படுத்தலாம்.
- சந்தை நுண்ணறிவுகள்: விளக்கப்படங்களும் கருவிகளும் போக்குகளைக் கண்காணிக்கவும் வர்த்தக வாய்ப்புகளைக் கண்டறியவும் உதவுகின்றன.
- பரந்த தேர்வு: நாணயங்கள், சரக்குகள், பங்குகள் மற்றும் Deriv நிறுவனத்தின் தனித்துவமான Derived Indices ஆகியவற்றில் வர்த்தகம் செய்யலாம்.
- உங்களுக்கேற்ற கணக்குகள்: வெவ்வேறு வர்த்தக பாணிகளுக்கும் அனுபவ நிலைகளுக்கும் ஏற்ப பல்வேறு கணக்கு வகைகள் உள்ளன.
உங்களுக்குப் பொருத்தமான கணக்கைக் கண்டறியுங்கள்
வெவ்வேறு வர்த்தகத் தேவைகளுக்கு ஏற்ப Deriv MT5 பல கணக்கு வகைகளை வழங்குகிறது:
- ஸ்டாண்டர்ட் கணக்கு. போட்டித்தன்மை வாய்ந்த ஸ்பிரெட் மற்றும் ஸ்வாப் கட்டணங்களுடன் அனைத்துத் தேவைகளுக்கும் ஏற்ற சிறந்த கணக்கு.
- ஸ்வாப்-இல்லாத கணக்கு. இரவுநேரக் கட்டணங்கள் இல்லை; நீண்டகால வர்த்தகர்களுக்கு மிகப் பொருத்தமானது.
- ஜீரோ ஸ்பிரெட் கணக்கு. ஸ்பிரெட் இல்லை, நிலையான கமிஷன் மட்டுமே; இதனால் செலவுகள் துல்லியமாகவும் முன்கூட்டியே கணிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
- ஃபைனான்ஷியல் கணக்கு. அடிக்கடி வர்த்தகம் செய்பவர்களுக்கு மிகக் குறைந்த ஸ்பிரெட்.
Deriv MT5 தளத்தை நீங்கள் எங்கு பயன்படுத்துகிறீர்கள்: டெஸ்க்டாப், வலை அல்லது மொபைல்?
நீங்கள் எப்படி வர்த்தகம் செய்ய விரும்பினாலும், உங்கள் பாணிக்குப் பொருந்தும் ஒரு Deriv MT5 பதிப்பு உள்ளது:
டெஸ்க்டாப் டெர்மினல். Windows, macOS மற்றும் Linux ஆகியவற்றுக்கான முழு அம்சங்களுடன் கூடிய விருப்பம்.
- ஒரே நேரத்தில் பல விளக்கப்படங்களைக் கண்காணிக்கலாம்.
- போக்குகளை ஆராய தொழில்நுட்பக் குறிகாட்டிகளையும் வரைதல் கருவிகளையும் பயன்படுத்தலாம்.
- Market Watch மூலம் சொத்து விலைகளைக் கவனிக்கலாம்.
- Expert Advisors (EAs) மூலம் வர்த்தகங்களைத் தானியங்கிமயமாக்கலாம்.
Deriv MT5 வலைப் பதிப்பு. பதிவிறக்கம் தேவையில்லை; உங்கள் உலாவியிலிருந்து உடனடி அணுகல் கிடைக்கும்.
- எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் வர்த்தகம் செய்யலாம்.
- எளிமையான, உள்ளுணர்வுடன் பயன்படுத்தக்கூடிய இடைமுகம்.
- சமீபத்திய அம்சங்களுடன் எப்போதும் புதுப்பிக்கப்பட்டிருக்கும்.
Deriv MT5 மொபைல் பதிப்பு. பயணத்தின்போதும் நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்யலாம்.
- நிகழ்நேர சந்தைப் புதுப்பிப்புகளைப் பெறலாம்.
- உங்கள் சாதனத்திலிருந்தே வர்த்தகங்களை உடனடியாக நிர்வகிக்கலாம்.
- நீங்கள் எங்கு சென்றாலும் இணைப்பில் இருக்கலாம்.
வர்த்தகத்தைத் தொடங்கத் தயாரா?
Deriv MT5 உடன் தொடங்குவது எளிது. Deriv வலைத்தளத்திற்குச் சென்று, உங்களுக்குப் பொருத்தமான பதிப்பைப் பதிவிறக்கவும் அல்லது சிரமமின்றித் தொடங்க வலைப் பதிப்பைப் பயன்படுத்திப் பார்க்கவும். நீங்கள் புதியவராக இருந்தால், உண்மையான பணத்தில் வர்த்தகம் செய்வதற்கு முன் டெமோ கணக்கில் பயிற்சி செய்யவும்.
மேலும் அறிய விரும்புகிறீர்களா? உங்கள் நம்பிக்கையை வளர்க்க Deriv MT5 இலவசப் பாடநெறிகளைப் பார்க்கவும்.
Quiz
மிகவும் மேம்பட்ட அம்சங்கள் உங்களுக்கு வேண்டுமெனில், எந்தப் பதிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்?


