
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நியாயமான, நிலையான, பாதுகாப்பான வர்த்தக அனுபவங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நம்பகமான வர்த்தகத் தளமாக இருப்பதில் Deriv உறுதியாக உள்ளது. நீங்கள் சிந்தெடிக் சுட்டெண்களை ஆராயும் புதியவராக இருந்தாலும் சரி, மேம்பட்ட தானியக்கத்தைப் பயன்படுத்தும் அனுபவமிக்க வர்த்தகராக இருந்தாலும் சரி, Deriv கணக்கைத் திறக்கும் தருணத்திலிருந்தே வெளிப்படையான விலை நிர்ணயம், உறுதியான அமைப்புகள், அர்ப்பணிப்புள்ள ஆதரவு ஆகியவற்றை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
நம்பகத்தன்மை என்பது வெறும் வாக்குறுதி அல்ல; எங்கள் தொழில்நுட்பம், அபாய மேலாண்மை, வெளிப்படையான செயல்பாட்டுக் கொள்கைகள் மூலம் நாங்கள் பின்பற்றும் தரநிலை ஆகும். ஆன்லைன் வர்த்தகத்தில் நியாயத்தன்மை, ஆர்டர் செயல்படுத்தல், நிலைத்தன்மை குறித்த கேள்விகள் பொதுவானவை. இவற்றை வெளிப்படையாக எதிர்கொள்ள நாங்கள் முயல்கிறோம். இந்த வழிகாட்டியில், நம்பகத்தன்மையை Deriv எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதையும், எங்கள் தளங்களில் நீங்கள் ஏன் நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்யலாம் என்பதையும் காண்பிப்போம்.
சுருக்கமான பார்வை
- நியாயத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் Deriv வர்த்தக அனுபவத்தின் மையமாகும். நாங்கள் நம்பகமான வழங்குநர்களிடமிருந்து நேரலை விலைகளைப் பெறுகிறோம்; உறுதியான ஆர்டர் செயல்படுத்தல் கொள்கைகளையும் பின்பற்றுகிறோம்.
- கையாளுதல், ஸ்லிப்பேஜ் அல்லது தளங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் குறித்த பயனர் கவலைகள் பொதுவானவை. ஆனால் அவற்றுக்குப் பெரும்பாலும் நடைமுறை சார்ந்த, சந்தை சார்ந்த விளக்கங்கள் உள்ளன.
- தொழில்நுட்பச் செயல்திறன் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது; ஆதரவு 24/7 கிடைக்கிறது.
- ஸ்பிரெட், மார்ஜின் போன்ற Deriv வர்த்தக நிபந்தனைகள் தெளிவாக வெளியிடப்பட்டு, நிகழ்நேரத்தில் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன.
- வாடிக்கையாளர் கருத்துகளே புதிய அம்சங்களுக்கு வழிவகுக்கின்றன. குறிகாட்டிகள் முதல் தள ஒருங்கிணைப்புகள், பயன்பாட்டு எளிமை மேம்பாடுகள் வரை இது நீள்கிறது.
Deriv வர்த்தகங்களில் கையாளுதல் செய்கிறதா?
இல்லை, Deriv வர்த்தகங்களில் கையாளுதல் செய்வதில்லை. எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நியாயமான, வெளிப்படையான வர்த்தகச் சூழலை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
வர்த்தகத் துறை முழுவதும், “Stop Loss வேட்டை” அல்லது “சந்தைக் கையாளுதல்” போன்ற சொற்கள் வர்த்தகர் சமூகங்களில் அடிக்கடி எழுகின்றன. வர்த்தகத் தளங்கள் வேண்டுமென்றே Stop Loss ஆர்டர்களைத் தூண்டக்கூடும், விலை வரைபடங்களை மாற்றக்கூடும் அல்லது வாடிக்கையாளருக்குப் பாதகமாகக் கேண்டில்ஸ்டிக்குகளைக் கையாளக்கூடும் என்ற சந்தேகத்தை இத்தகைய கவலைகள் பொதுவாக அடிப்படையாகக் கொண்டுள்ளன. சில நேரங்களில், டெமோ கணக்குகளில் உள்ள அனுபவத்துக்கும் நேரலை வர்த்தகச் சூழல்களில் உள்ள அனுபவத்துக்கும் இடையே வெளிப்படையான முரண்பாடுகளையும் வர்த்தகர்கள் கவனிக்கின்றனர்.
நிதிச் சந்தைகளின் கணிக்க முடியாத தன்மையைக் கருத்தில் கொண்டால், இத்தகைய சந்தேகங்கள் எழக்கூடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதிக ஏற்ற இறக்கம் உள்ள காலகட்டங்கள், ஸ்லிப்பேஜ், விரைவான விலை மாற்றங்கள் ஆகியவை, குறிப்பாக முக்கியச் செய்தி நிகழ்வுகளின்போதும் திடீர் பணப்புழக்கக் குறைவின்போதும், அனைத்துத் தளங்களிலும் பொதுவானவை; அவை Deriv-க்கு மட்டுமே உரியவை அல்ல. இந்த இயல்பான சந்தை நிகழ்வுகளைக் கையாளுதல் என்று எளிதில் தவறாகக் கருதிவிடலாம். உண்மையில், நிதிப் பரிமாற்றங்கள் செயல்படும் அடிப்படை நுட்பங்களையே அவை பிரதிபலிக்கின்றன.
வெளிப்படைத்தன்மையையும் நம்பிக்கையையும் பேண, பல சுயாதீன உலகளாவிய வழங்குநர்களிடமிருந்து விலைகளைப் பெறுகிறோம். இதன் மூலம் விலை ஓடைகள் உண்மையான சந்தை நிலவரங்களை முடிந்தவரை நெருக்கமாகப் பிரதிபலிக்கின்றன. எங்கள் ஆர்டர் செயல்படுத்தல் கொள்கைகள் பொதுவில் கிடைக்கின்றன. எங்கள் தளத்தில் நடைபெறும் ஒவ்வொரு வர்த்தகமும் பதிவு செய்யப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டு, கடுமையான ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுகிறது.
சந்தேகத்துக்குரிய ஒழுங்கற்ற விலையாக இருந்தாலும் சரி, எதிர்பாராத ஆர்டர் செயல்படுத்தலாக இருந்தாலும் சரி, வழக்கத்துக்கு மாறான எதையாவது நீங்கள் கவனித்தால், எங்களை நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம். ஒவ்வொரு புகாரும் தனித்தனியாகக் கையாளப்பட்டு, முழுமையாக விசாரிக்கப்படுகிறது; முடிவும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அணுகுமுறை எங்கள் தரநிலை மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள முன்னணி, நன்மதிப்புள்ள புரோக்கர்களிடம் எதிர்பார்க்கப்படும் அடிப்படைப் பண்பும் ஆகும்.
Deriv தளத்தின் நிலைத்தன்மை: செயல்திறன் மேலோட்டம் வர்த்தகத் தளங்கள்
தொழில்நுட்பப் புத்தாக்கத்தின் வேகம் வர்த்தகத்தை நிகழ்நேரச் செயல்பாடாக மாற்றியுள்ளது. நீங்கள் ஸ்கால்ப்பிங் செய்தாலும் ஸ்விங் வர்த்தகம் செய்தாலும் ஒவ்வொரு விநாடியும் முக்கியம். இருப்பினும், சில நேரங்களில் வர்த்தகர்கள் தாமதமாகும் வரைபடங்கள், மெதுவான ஆர்டர் செயல்படுத்தல் அல்லது தற்காலிகக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர். இது Deriv-க்கு மட்டுமே உரியது அல்ல. அதிக சுமையின்போதும், குறிப்பாக முக்கியப் பொருளாதார அறிவிப்புகள் போன்ற நிகழ்வுகளின்போதும், தடையற்ற சேவையை வழங்குவது அனைத்துத் தளங்களுக்கும் சவாலாகவே உள்ளது.
எங்கள் அமைப்புகளை 24 மணிநேரமும் கண்காணிக்கிறோம்; உள்கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்துகிறோம்; எங்கள் இணையத் தளங்களிலும் மொபைல் தளங்களிலும் மேம்பாடுகளை வெளியிடுகிறோம். திட்டமிட்ட பராமரிப்பு நடைமுறைகள் அல்லது எதிர்பாராத தளச் செயலிழப்புகள் குறித்த அறிவிப்புகளை Deriv Statuspage பக்கத்திலும் நீங்கள் காணலாம்.
நீங்கள் தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொண்டால், அதன் மூல காரணம் எங்கள் சேவையகங்களில் உள்ளதா அல்லது வாடிக்கையாளரின் உள்ளூர் நெட்வொர்க்கில் அல்லது சாதன அமைப்பில் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். எந்த ஆன்லைன் வர்த்தகத்துக்கும் தொழில்துறையின் சிறந்த நடைமுறை பரிந்துரைப்பதுபோல, வாடிக்கையாளர்கள் தங்கள் வர்த்தகத் தளத்தையும் இயக்க முறைமைகளையும் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
ஸ்பிரெட், மார்ஜின், வர்த்தக நிபந்தனைகள்
அனைத்து வர்த்தகர்களும் ஏதோ ஒரு கட்டத்தில், ஸ்பிரெட் ஏன் விரிவடைகிறது, மார்ஜின் தேவைகள் ஏன் மாறுகின்றன, லாட் அளவுகள் சில நேரங்களில் ஏன் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று கேள்வி எழுப்புகிறார்கள். இந்த அனுபவங்கள் Deriv-க்கு மட்டுமே உரியவை அல்ல; சந்தைகள் செயல்படும் அடிப்படை முறையிலிருந்தே அவை உருவாகின்றன. தொழில்துறை முழுவதும், புரோக்கர்கள் நிலையான அல்லது மாறக்கூடிய ஸ்பிரெட்டை வழங்குகிறார்கள். பல முன்னணி புரோக்கர்களைப் போலவே Deriv-லும், பெரும்பாலான கருவிகளில் மாறக்கூடிய ஸ்பிரெட்டைப் பயன்படுத்துகிறோம்; இது உலகளாவிய சந்தைப் பணப்புழக்கத்தின் உண்மையான ஏற்ற இறக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
பொருளாதார நிச்சயமற்ற காலங்களிலும், திடீர்ச் சந்தை நகர்வுகளின்போதும், குறைந்த பணப்புழக்கத்தின்போதும் (வழக்கமான வர்த்தக நேரத்துக்குப் பிறகு போன்றவை), ஸ்பிரெட் தற்காலிகமாக அதிகரிக்கலாம். வாடிக்கையாளர்களையும் சந்தையின் நிலைத்தன்மையையும் பாதுகாக்க மார்ஜின் தகவமைக்கப்படலாம். பங்கேற்பாளர் அனைவருக்கும் அபாயம் விவேகத்துடன் நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்ய, சில சந்தைகளில் லாட் அளவுகளும் கட்டுப்படுத்தப்படலாம். வெளிப்படைத்தன்மையைப் பேண, எங்கள் வர்த்தக விவரக்குறிப்புகளையும் மார்ஜின் தேவைகளையும் எங்கள் வலைத்தளத்தில் வெளியிடுகிறோம்; சந்தை நிலவரங்கள் மாறும்போது அவற்றைப் புதுப்பிக்கிறோம். வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நம்பகமான புரோக்கர்கள் எடுக்கும் பொதுவான நடவடிக்கை இது.
உலகில் எங்கு வர்த்தகம் செய்தாலும் அனுபவமிக்க நிபுணர்கள் செய்வதைப் போலவே, வர்த்தகம் செய்வதற்கு முன் புதுப்பிப்புகளைச் சரிபார்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுமாறு எங்கள் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கிறோம்.
குறிகாட்டிகள், கருவிகள், தள அம்சங்கள்
வர்த்தக உத்திகள் வளர்ச்சி அடையும்போது, வர்த்தகர்கள் பயன்படுத்தும் தளங்கள் மீதான அவர்களின் எதிர்பார்ப்புகளும் உயர்கின்றன. அதிகக் குறிகாட்டிகள், கருவிகள் அல்லது அம்சங்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் தொடர்ந்து கருத்துகளைப் பெறுகிறோம். TradingView போன்ற வரைபடச் சேவைகளுடன் ஒருங்கிணைப்பது முதல், மேலும் மேம்பட்ட தானியக்கத்தைச் செயல்படுத்துவது, தாமதமான வர்த்தக அமர்வுகளுக்கு இரவுப் பயன்முறை கோருவது வரை அவை நீள்கின்றன.
இது தொழில்துறை முழுவதும் அறியப்பட்ட ஒரு கதை: வர்த்தகர்கள் தளங்களைப் புதுமைகளை நோக்கித் தூண்டுகிறார்கள், தளங்கள் முடிந்தவரை விரைவாகப் பதிலளிக்கின்றன. Deriv நிறுவனத்தில், எங்கள் தயாரிப்புக் குழுக்கள் புதிய கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்து, போட்டியாளர்களின் சேவைகளையும் கண்காணிக்கின்றன. இதன் மூலம் நாங்கள் போட்டியில் பின்தங்காமல் இருப்பதோடு, உண்மையான மதிப்பையும் வழங்குகிறோம். சில அம்சங்கள் விரைவாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதிக மேம்பாட்டுப் பணி அல்லது ஒழுங்குமுறை ஒப்புதல் தேவைப்படும் மற்ற அம்சங்களுக்கு அதிக காலம் ஆகலாம்.
இந்தச் செயல்முறையை இயக்கமுள்ளதாக வைத்திருக்க, எங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்ச்சியான உரையாடலை ஊக்குவிக்கிறோம். ஒவ்வொரு பரிந்துரையும் எங்கள் தளங்களின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவுகிறது. இறுதியில், சமூகத்தின் தேவைகளுடன் சேர்ந்து வளரும் கருவிகளின் தொகுப்பு உருவாகிறது.
Deriv உள்நுழைவு: அணுகல் சிக்கல்களுக்கான தீர்வு
அணுகலும் பாதுகாப்பும் வர்த்தகத்தில் நம்பிக்கையின் அடித்தளமாகும். சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் உள்நுழைவதில், தங்கள் கணக்குகளை மீட்டெடுப்பதில் அல்லது MT5 டெஸ்க்டாப் போன்ற பயன்பாடுகளுடன் இணைப்பதில் சிரமத்தை எதிர்கொள்ளலாம். கடவுச்சொல் மீட்டமைப்பு, சாதனப் பொருந்தக்கூடிய தன்மை, அல்லது தொடர்ச்சியாகத் தோல்வியடைந்த முயற்சிகளுக்குப் பிறகு கணக்குகளைப் பூட்டும் பாதுகாப்பு நெறிமுறைகள் போன்ற பல காரணங்களால் இத்தகைய அனுபவங்கள் ஏற்படலாம்.
இத்தகைய தடைகள் ஏற்படும் போதெல்லாம், சுய-சேவைக் கருவிகளுடனும் அர்ப்பணிப்புள்ள ஆதரவுக் குழுவுடனும் மீட்டெடுப்புச் செயல்முறையில் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்ட நாங்கள் தயாராக உள்ளோம். ஒவ்வொரு சம்பவத்திலும் அடிப்படையான தொழில்நுட்பக் காரணங்கள் உள்ளனவா என்பதையும் ஆராய்கிறோம். பெரும்பாலான தரகு நிறுவனங்களைப் போலவே, உண்மையான வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அணுக முடிவதை உறுதிசெய்யும் அதே வேளையில், பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை வலுவாக வைத்திருப்பதே எங்கள் கொள்கை.
நியாயமான வர்த்தகம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான Deriv இன் அர்ப்பணிப்பு
வர்த்தகத் துறை முழுவதும், நியாயமான விலை நிர்ணயம், நேர்மையான ஆர்டர் செயல்படுத்தல், வாடிக்கையாளர் தீர்வு வழிகள் ஆகியவையே மிகவும் நம்பகமான தரகு நிறுவனங்களை வரையறுக்கின்றன. Deriv நிறுவனத்தில், இந்தத் தொழில்துறைத் தரத்தின் ஒரு பகுதியாக நாங்கள் எங்களைக் கருதுகிறோம். பல விலை ஊட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், எங்கள் ஆர்டர் செயல்படுத்தல் கொள்கையைப் பொதுவில் வெளியிடுவதன் மூலமும், நலன் முரண்பாடுகளைக் குறைக்கவும், எங்கள் அமைப்புகளின் நேர்மையைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யவும் முயல்கிறோம்.
நியாயம் அல்லது வெளிப்படைத்தன்மை குறித்து வாடிக்கையாளர் ஒருவர் கவலை எழுப்பும் போதெல்லாம்—ஒரு குறிப்பிட்ட வர்த்தகத்தின் விவரங்கள் முதல் பரந்த வர்த்தக நிலைமைகள் வரை—நாங்கள் முழுமையாக விசாரித்து, எங்கள் கண்டறிதல்களைத் தெளிவாகத் தெரிவிக்கிறோம். ஆன்லைன் வர்த்தகத்தில் மிகவும் நம்பகமான நிறுவனங்களிடம் ஒழுங்குமுறை அமைப்புகள் எதிர்பார்ப்பதைப் பிரதிபலிக்கும் வகையில், எங்கள் இணக்கக் குழு சுதந்திரமாகச் செயல்படுகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் வர்த்தகப் பயணத்தின் எந்தக் கட்டத்திலும் என்ன நடக்கிறது என்பதைச் சரிபார்க்க முடியும்படி, முக்கிய ஆவணங்கள், புதுப்பிப்புகள் மற்றும் தளத்தின் நிலைக் குறிகாட்டிகளை வெளியிடுகிறோம்.
Deriv வர்த்தகர்களுக்கான முக்கியக் குறிப்புகள்
Deriv தளத்தில் எழும் ஒவ்வொரு கேள்வியும் கவலையும் மாறும் தன்மையுடைய உலகளாவிய சந்தைகளில் வர்த்தகம் செய்வதன் இயல்பான பகுதியாகும். நியாயம், தொழில்நுட்பச் செயல்திறன் அல்லது மாறிவரும் வர்த்தக நிலைமைகள் தொடர்பான பிரச்சினைகள் தொழில்துறை முழுவதும் பொதுவானவை என்றாலும், ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்குமான வாய்ப்பாக நாங்கள் பார்க்கிறோம். திறந்த உரையாடல், வெளிப்படையான செயல்பாடுகள், வாடிக்கையாளர் கல்வி மற்றும் ஆதரவுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பேணுவதன் மூலம், ஆன்லைன் வர்த்தகத்தில் மிக உயர்ந்த தரங்களை எட்ட Deriv தொடர்ந்து முயற்சிக்கிறது.
Quiz
Deriv தளத்தில் எதிர்பாராத ஒன்றை நீங்கள் கவனித்தாலோ அல்லது ஒரு வர்த்தகம் நியாயமற்ற முறையில் செயல்படுத்தப்பட்டது என்று நம்பினாலோ, உங்கள் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும்?


