
டெரிவேட்டிவ்களில் வர்த்தகம் செய்வதன் மூலம், அடிப்படைச் சொத்தை சொந்தமாக்காமலேயே உலகளாவிய சந்தைகளை அணுகலாம். Deriv தளத்தில் வேறுபாட்டுக்கான ஒப்பந்தங்கள் (CFD) அல்லது ஆப்ஷன்கள் CFD வர்த்தக வழிகாட்டி மூலம் இதைச் செய்யலாம். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன.
உங்கள் இலக்குகளுக்கு எது பொருந்தும் என்பதை நீங்கள் முடிவு செய்ய, இந்த வழிகாட்டியில் CFD மற்றும் ஆப்ஷன்களை அமைப்பு, தளங்கள், கட்டணங்கள், வர்த்தக உத்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பிடுகிறோம்.
சுருக்கமான பார்வை
- CFD இல் நெகிழ்வுத்தன்மையும் Leverage வசதியும் உள்ளன. இதனால் எந்த நேரத்திலும் வர்த்தகங்களைத் தொடங்கவும் முடிக்கவும் முடியும். ஆனால் கவனமாக நிர்வகிக்காவிட்டால் இழப்புகள் உங்கள் வைப்புத் தொகையை விட அதிகமாகலாம்.
- ஆப்ஷன்களுக்கு நிலையான காலாவதி உள்ளது, இழப்புகளும் வரையறுக்கப்பட்டவை. இதனால் குறுகியகால, நீண்டகால வர்த்தகங்கள் இரண்டிலும் கட்டமைக்கப்பட்ட முடிவுகளும் தெளிவான அபாயக் கட்டுப்பாடும் கிடைக்கின்றன.
- CFD Deriv MT5 மற்றும் Deriv cTrader தளங்களிலும், ஆப்ஷன்கள் Deriv Trader, Deriv Bot, Deriv GO தளங்களிலும் கிடைக்கின்றன. எனவே வர்த்தகர்கள் தங்கள் பாணிக்குப் பொருந்தும் கருவிகளைத் தேர்வு செய்யலாம்.
- CFD இன் பலன் நேர்கோட்டு வடிவில் இருக்கும். Leverage லாபம், இழப்பு இரண்டையும் பெருக்குகிறது. ஆப்ஷன்களின் பலன் வகைக்கு ஏற்ப மாறுபடும்: டிஜிட்டல் ஆப்ஷன்களில் படிக்கட்டு போன்றும், Vanilla ஆப்ஷன்களில் ஸ்ட்ரைக் விலையில் சாய்வு மாறுவதாகவும், Multipliers இல் வரம்புக்குட்பட்டதாகவும் இருக்கும்.
அடிப்படை வேறுபாடுகளை இப்போது அறிந்துகொண்டீர்கள். இந்தத் தயாரிப்புகள் Deriv தளங்களில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.
Deriv தளத்தில் CFD க்கும் ஆப்ஷன்களுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?
ஒவ்வொரு தயாரிப்பும் Deriv நிறுவனத்தின் பிரத்யேகத் தளங்களில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பார்த்துத் தொடங்குவோம்.
Deriv MT5 மற்றும் Deriv cTrader தளங்களில் CFD
இந்தத் தளங்கள் தொழில்முறைத் தரத்திலான வர்த்தகத்திற்காக உருவாக்கப்பட்டவை. Deriv MT5 மற்றும் Deriv cTrader ஆகிய இரண்டும் பல்வகைச் சொத்துகளுக்கான ஆதரவு, மேம்பட்ட சார்ட்டிங், விரைவான செயலாக்கம், ஆழமான பணப்புழக்கத்தின் ஆதரவுடன் தானியக்க அம்சங்கள் ஆகியவற்றை வழங்குகின்றன. மேலும் மார்ஜின் வர்த்தகம், பல்வேறு சந்தைகள், நெகிழ்வான அபாய மேலாண்மை ஆகியவற்றையும் ஆதரிக்கின்றன.
எடுத்துக்காட்டு: Deriv cTrader தளத்தில் ஒரு ஃபாரெக்ஸ் ஸ்கால்பர், ஏற்ற இறக்கம் அதிகமுள்ள நாணய ஜோடியில் பல குறுகியகால வர்த்தகங்களைச் செய்யக்கூடும்.

Deriv Trader, Deriv Bot, Deriv GO தளங்களில் ஆப்ஷன்கள்
இந்தத் தளங்கள் ஆப்ஷன்கள் வர்த்தகத்தை எளிதாக்குகின்றன. Deriv Trader தளம் எளிய டிஜிட்டல் மற்றும் டர்போ ஆப்ஷன்களை வழங்குகிறது. Deriv Bot, இழுத்து-விடும் லாஜிக் பிளாக்குகள் மூலம் உத்திகளைத் தானியக்கமாக்குகிறது. Deriv GO, வேகமாக நகரும் சந்தைகளில் விரைவான மொபைல் வர்த்தகத்தை வழங்குகிறது.
இந்தப் பிரிவினை, ஒவ்வொரு தயாரிப்பின் பலங்களிலும் வர்த்தகர்கள் கவனம் செலுத்த உதவுவதுடன் வெளிப்படைத்தன்மையையும் ஆதரிக்கிறது. 2025 ஆம் ஆண்டிலும் மார்ஜின் அறிக்கையிடல், வாடிக்கையாளர் பாதுகாப்பு தொடர்பான சிறந்த நடைமுறைகளுடன் Deriv தொடர்ந்து இணங்குகிறது.

CFD, ஆப்ஷன்கள், ஃபியூச்சர்ஸ் ஆகியவை எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன?
இந்த ஒப்பீடு காட்டுவது: CFD நெகிழ்வுத்தன்மைக்கும் Leverage க்கும் முன்னுரிமை அளிக்கிறது; ஆப்ஷன்கள் கணிக்கக்கூடிய தன்மையையும் வரம்புக்குட்பட்ட அபாயத்தையும் வலியுறுத்துகின்றன; ஃபியூச்சர்ஸ் தரப்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களிலும் நீண்டகால உறுதிப்பாடுகளிலும் கவனம் செலுத்துகின்றன. இவை பொதுவாக நிறுவன வர்த்தகர்களுக்குப் பொருந்தும்.
| அம்சம் | CFD | ஆப்ஷன்கள் | ஃபியூச்சர்ஸ் |
|---|---|---|---|
| Leverage | 1:1000 வரை (சொத்தைப் பொறுத்தது) | Multipliers உடன் (4000× வரை) | பொதுவாக 10–50× (பரிமாற்றகத்தால் ஒழுங்குபடுத்தப்படுகிறது) |
| அபாய வெளிப்பாடு | இழப்புகள் வைப்புத் தொகையை விட அதிகமாகலாம் | இழப்புகள் வைப்புத் தொகையளவில் வரம்புக்குட்பட்டவை | இழப்புகள் மார்ஜின் வைப்புத் தொகையை விட அதிகமாகலாம் |
| கால அளவு | காலாவதி இல்லை; எந்த நேரத்திலும் முடிக்கலாம் | நிலையான கால அளவுகள் (விநாடிகள் – மாதங்கள்) | ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான காலாவதி தேதிகள் |
| நெகிழ்வுத்தன்மை | விரும்பும் நேரத்தில் நுழையலாம்/வெளியேறலாம் | ஒப்பந்த விதிமுறைகளால் வரையறுக்கப்பட்டது | காலாவதிக்கு முன் வைத்திருக்க வேண்டும் அல்லது ஈடுசெய்ய வேண்டும் |
| லாப வாய்ப்பு | வரம்பற்றது, விலை நகர்வுடன் தொடர்புடையது | நிலையான அல்லது மாறக்கூடிய கொடுப்பனவு | வரம்பற்றது, ஒப்பந்த அளவு மற்றும் விலை மாற்றத்துடன் தொடர்புடையது |
| முடிவு நிர்ணய அடிப்படை | நுழைவு விலைக்கும் வெளியேறும் விலைக்கும் உள்ள வேறுபாடு | ஒப்பந்த வகையைப் பொறுத்தது (டிஜிட்டல், டர்போ, Vanilla) | நுழைவு விலைக்கும் காலாவதியின்போதான தீர்வு விலைக்கும் உள்ள வேறுபாடு |
| உரிமை | இல்லை | இல்லை | காலாவதியின்போது வாங்க அல்லது விற்கும் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது |
| அணுகல்தன்மை | Deriv MT5 மற்றும் Deriv cTrader வழியாகச் சில்லறை வர்த்தகர்களுக்குக் கிடைக்கிறது | Deriv Trader, Deriv Bot, Deriv GO தளங்களில் கிடைக்கிறது | நிறுவனங்களால் முக்கியப் பரிமாற்றகங்களில் பொதுவாக வர்த்தகம் செய்யப்படுகிறது |
CFD எடுத்துக்காட்டு:
10% மார்ஜினுடன் (வைப்புத் தொகை USD 210), USD 210 விலையில் Apple மீது 10 CFD வாங்குகிறீர்கள்.
- Apple USD 215 ஆக உயர்ந்தால் → லாபம் USD 50.
- Apple USD 205 ஆகக் குறைந்தால் → இழப்பு USD 50.

ஆப்ஷன்கள் எடுத்துக்காட்டு:
30 நிமிடங்களில் விலை உயரும் என்று கணித்து, EUR/USD மீது டிஜிட்டல் ஆப்ஷனை வாங்குகிறீர்கள்.
- கணிப்பு சரியாக இருந்தால் → நிலையான கொடுப்பனவு (70–90%).
- கணிப்பு தவறாக இருந்தால் → இழப்பு தொடக்க வர்த்தகத் தொகையளவில் வரம்புக்குட்பட்டது.

ஃபியூச்சர்ஸ் எடுத்துக்காட்டு:
தங்க ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தம், எதிர்காலத் தேதியில் நிலையான விலையில் தங்கத்தை வாங்க அல்லது விற்க வர்த்தகரைக் கடமைப்படுத்துகிறது.
- லாபமோ இழப்போ, ஒப்பந்த நுழைவு விலைக்கும் தீர்வு விலைக்கும் இடையிலான வேறுபாட்டைப் பொறுத்தது.
- ஃபியூச்சர்ஸுக்குப் பெரும்பாலும் அதிக மூலதனமும் மார்ஜினும் தேவைப்படும். இதனால் சில்லறை வர்த்தகர்களுக்கு அவை குறைந்த நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக உள்ளன.

CFD வர்த்தகர்கள் பெரிய நிலைகளுக்கு Leverage பயன்படுத்துகின்றனர். ஆப்ஷன்கள் வர்த்தகர்கள் முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட வெளிப்பாட்டை விரும்புகின்றனர்.
ஒவ்வொரு தயாரிப்பும் கட்டுப்பாடு, Leverage, அபாயம் ஆகியவற்றை எவ்வாறு சமநிலைப்படுத்துகிறது என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன.
கட்டணங்கள், நிதியளிப்பு, நடைமுறைக் கருத்தில்கொள்ள வேண்டியவை பற்றி நீங்கள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?
CFD
- Spreads இல் கட்டணங்கள் அடங்கும்; சில சொத்துகளுக்குச் சிறிய கமிஷனும் இருக்கலாம்.
- ஒரே இரவு நிதியளிப்பு (ஸ்வாப்), நிலையின் திசையைப் பொறுத்துக் கட்டணங்களையோ வரவுகளையோ சேர்க்கலாம்.
- பணப்புழக்கம் முக்கியம்; வேகமான சந்தைகளில் ஆர்டருக்கும் நிறைவேற்றத்திற்கும் இடையே விலை நழுவலாம்.
- நிலையின் பக்கத்தைப் பொறுத்து, பங்கு CFD ஈவுத்தொகையையும் நிறுவன நடவடிக்கைகளையும் பிரதிபலிக்கலாம்.
ஆப்ஷன்கள்
- வர்த்தகத் தொகை அல்லது பிரீமியம் முன்கூட்டியே தெரியும்; அதுவே அதிகபட்ச இழப்பு ஆகும்.
- கொடுப்பனவு ஒப்பந்த வகையைப் பொறுத்தது; நிபந்தனைகள் பூர்த்தியானால் டிஜிட்டல், டர்போ ஆப்ஷன்கள் நிலையான வருவாயை வழங்குகின்றன.
- நேர உணர்திறன் முக்கியம்: நேரச் சிதைவும் ஏற்ற இறக்கமும் விலை நிர்ணயத்தைப் பாதிக்கின்றன, குறிப்பாக Vanilla ஆப்ஷன்களில்.
ஒப்பிடும்போது, வைப்புத் தொகை, எதிர்பார்க்கும் வைத்திருப்பு நேரம், ஏற்ற இறக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவும். மேலும் நீங்கள் நெகிழ்வுத்தன்மையை (CFD) மதிக்கிறீர்களா அல்லது முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட முடிவுகளை (ஆப்ஷன்) மதிக்கிறீர்களா என்பதையும் பரிசீலிக்கவும்.
CFD அல்லது ஆப்ஷன்களை எப்போது தேர்வு செய்ய வேண்டும்?
சந்தை நிலைமைகள் தயாரிப்புத் தேர்வைப் பாதிக்கின்றன:
- ஏற்ற இறக்கம்: உயரும், வீழும் சந்தைகள் இரண்டிலும் லாபம் ஈட்ட CFD வர்த்தகர்கள் Leverage பயன்படுத்துகின்றனர். வரம்புக்குட்பட்ட இழப்புகளுடன் விரைவான கணிப்புகளைச் செய்ய ஆப்ஷன்கள் வர்த்தகர்கள் டிஜிட்டல் அல்லது டர்போ ஒப்பந்தங்களைப் பயன்படுத்துகின்றனர்.
- ஹெட்ஜிங்: சிலர் CFD நிலைகளை ஆப்ஷன்களுடன் ஹெட்ஜ் செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, S&P 500 மீதான லாங் CFD நிலையைப் புட் ஆப்ஷன் மூலம் சமன்செய்வது.
- ஒழுங்குமுறை: Leverage கட்டுப்பாடுகள் உள்ளதாலும், இழப்புகள் முன்கூட்டியே தெரியும் என்பதாலும் ஆப்ஷன்கள் தொடக்கநிலையாளர்களுக்குக் கவர்ச்சிகரமாக உள்ளன.
- சந்தைப் போக்குகள்: ஏற்றமான அல்லது செயல்பாடு மிக்க சந்தைகளுக்கு CFD பொருந்தும்; கட்டமைக்கப்பட்ட முடிவுகள் தேவைப்படும் நிச்சயமற்ற சூழல்களுக்கு ஆப்ஷன்கள் பொருந்தும்.
Deriv நிறுவனத்தின் Product Owner Muhammad Bilal Tariq குறிப்பிடுவது:
“சில்லறை வர்த்தகர்கள் அபாயத்தையும் வாய்ப்பையும் சமநிலைப்படுத்த CFD மற்றும் ஆப்ஷன்கள் இரண்டையும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். CFD நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது; ஆப்ஷன்கள், ஏற்ற இறக்க நிகழ்வுகளைச் சுற்றி வெளிப்பாட்டைக் கட்டமைக்க உதவுகின்றன.”
உங்களுக்கு எந்த வர்த்தக உத்திகளும் அபாய மேலாண்மை அணுகுமுறைகளும் சிறப்பாகப் பொருந்தும்? வர்த்தக உத்திகள்
CFD உத்திகள்
- போக்கைப் பின்பற்றுதல்: திசை சார்ந்த நகர்வுகளில் பயணிக்க நகரும் சராசரிகள் போன்ற குறிகாட்டிகளைப் பயன்படுத்தவும்.
- வரம்பு வர்த்தகம்: ஒருங்கிணைப்பு மண்டலங்களை அடையாளம் கண்டு, சராசரியை நோக்கிய திரும்புதல்களில் வர்த்தகம் செய்யவும்.
- நிகழ்வு வர்த்தகம்: இறுக்கமான Stop Loss நிலைகளையும் குறைந்த அபாய வெளிப்பாட்டையும் பயன்படுத்தி செய்தி வெளியீடுகளுக்கு எதிர்வினையாற்றவும்.
ஆப்ஷன்கள் உத்திகள்
- குறுகிய கால வர்த்தகங்கள்: டிஜிட்டல் அல்லது டர்போ ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி விரைவான திசை சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்தவும்.
- ஹெட்ஜிங்: திறந்துள்ள CFD நிலைகளை எதிர்திசை ஆப்ஷன்கள் வெளிப்பாட்டுடன் பாதுகாக்கவும்.
- நேர அடிப்படையிலான ஊகம்: தரவு வெளியீடுகள் போன்ற முன்கணிக்கப்பட்ட நிகழ்வுகளுடன் ஆப்ஷன் காலாவதியைப் பொருத்தவும்.
Deriv Academy பகுப்பாய்வாளர்கள் கூறுவதன்படி:
“ஒவ்வொரு நிலைக்குமான அபாய வெளிப்பாட்டைக் கணக்கு ஈக்விட்டியில் 1–2% ஆக வரம்பிடும் வர்த்தகர்கள், ஏற்ற இறக்கமான காலங்களிலும் தங்கள் செயல்திறனை மேலும் சிறப்பாகத் தக்கவைக்க முடிகிறது.”
அபாய மேலாண்மைக் குறிப்புகள்
- CFD வர்த்தகங்களில் Stop Loss நிலைகளைப் பயன்படுத்தவும்; ஆப்ஷன்களுக்குப் பொருத்தமான காலாவதிக் காலங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- வெளிப்பாட்டைச் சமநிலைப்படுத்த பல்வேறு சந்தைகளில் பல்வகைப்படுத்தவும்.
- Deriv இன் போர்ட்ஃபோலியோ பகுப்பாய்வுக் கருவிகள் மூலம் செயல்திறனைக் கண்காணிக்கவும்.
இந்த நுட்பங்களைப் பயன்படுத்துவது, CFD மற்றும் ஆப்ஷன்கள் இரண்டிலும் சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப வர்த்தகர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவும் ஒழுக்கத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது.
சில்லறை வர்த்தகர்களுக்கு ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் CFD மற்றும் ஆப்ஷன்களுடன் ஒப்பிடும்போது எவ்வாறு உள்ளன?
| ஃபியூச்சர்ஸ் | CFD | ஆப்ஷன்கள் | |
|---|---|---|---|
| மார்ஜின் | முழு மதிப்பும் முன்கூட்டியே | வைப்புத் தொகை (மார்ஜின்) | செலவு (பிரீமியம்) |
| நெகிழ்வுத்தன்மை | நிலையான ஒப்பந்தம் | காலவரம்பற்றது | காலவரம்பற்றது |
| மூலதனத் தேவை | அதிகம் | குறைவு | குறைவு |
ஃபியூச்சர்ஸ் கட்டமைப்பு, மூலதனத் தேவைகள், நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றில் வேறுபடுகின்றன; இவை பெரும்பாலும் சில்லறை வர்த்தகர்களை விட நிறுவனங்களுக்கே பொருந்துகின்றன.
- கட்டமைப்பு: ஃபியூச்சர்ஸ் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் குறிப்பிட்ட விலைக்குக் கட்டுப்படுத்துகின்றன; CFD மற்றும் ஆப்ஷன்களை எந்த நேரத்திலும் மூடலாம்.
- மூலதனம்: ஃபியூச்சர்ஸுக்குப் பெரிய வைப்புத் தொகைகளும் தரப்படுத்தப்பட்ட ஒப்பந்த அளவுகளும் தேவைப்படுகின்றன.
- பயன்பாட்டு நிகழ்வுகள்: நிறுவனங்கள் பண்டங்கள், வட்டி விகிதங்கள் அல்லது சுட்டெண்களை ஹெட்ஜ் செய்ய ஃபியூச்சர்ஸைப் பயன்படுத்துகின்றன; CFD மற்றும் ஆப்ஷன்கள் சில்லறைப் பயன்பாட்டுக்கு எளிதில் அணுகக்கூடியவை.
Deriv நிறுவனம் CFD மற்றும் ஆப்ஷன்களில் கவனம் செலுத்துகிறது; ஏனெனில் தனிப்பட்ட வர்த்தகர்கள் விரும்பும் நெகிழ்வுத்தன்மையையும் வரையறுக்கப்பட்ட அபாய அம்சங்களையும் இவை ஒருங்கிணைக்கின்றன.
உங்கள் உத்திக்குச் சரியான தயாரிப்பை எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம்?
வாய்ப்பையும் அபாயத்தையும் நீங்கள் எவ்வாறு சமநிலைப்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் முடிவு அமையும்.
பின்வருவன வேண்டுமெனில் CFD:
- காலாவதி இல்லாத நெகிழ்வான வர்த்தகங்கள்.
- சிறிய வைப்புத் தொகையுடன் வெளிப்பாட்டை அதிகரிக்க Leverage.
- ஃபாரெக்ஸ், பங்குகள், பண்டங்கள், கிரிப்டோ கரன்சிகள், டெரைவ்டு சுட்டெண்கள் ஆகியவற்றுக்கான அணுகல்.
- மேம்பட்ட பகுப்பாய்வுக் கருவிகள் மற்றும் பல உத்தி விருப்பங்கள்.
பின்வருவனவற்றை விரும்பினால் ஆப்ஷன்கள்:
- வரையறுக்கப்பட்ட இழப்புகளுடன் நிலையான முடிவுகள்.
- கட்டமைக்கப்பட்ட வர்த்தகங்களுக்கான வரையறுக்கப்பட்ட கால அளவுகள்.
- மார்ஜின் மேலாண்மை இல்லாத எளிய ஒப்பந்தங்கள்.
- CFD நிலைகளை ஹெட்ஜ் செய்யும் திறன்.

வாய்ப்பையும் பாதுகாப்பையும் சமநிலைப்படுத்த வர்த்தகர்கள் இந்தக் கருவிகளை இணைத்துப் பயன்படுத்துவதாக Deriv இன் உள் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்:
“சில்லறை வர்த்தகர்கள் அபாயத்தையும் வாய்ப்பையும் சமநிலைப்படுத்த CFD மற்றும் ஆப்ஷன்கள் இரண்டையும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். CFD நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது; ஆப்ஷன்கள் ஏற்ற இறக்க நிகழ்வுகளைச் சுற்றி அபாய வெளிப்பாட்டைக் கட்டமைக்க உதவுகின்றன.”
நீங்கள் முடிவெடுக்கவில்லை என்றால், இரு தயாரிப்புகளையும் உண்மையான சூழ்நிலைகளில் சோதிக்க USD 10,000 மெய்நிகர் நிதியுடன் கூடிய இலவச Deriv டெமோ கணக்கைத் திறக்கவும்.
நீங்கள் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள் யாவை?
- அதிகப்படியான Leverage: அதிக Leverage லாபத்தையும் இழப்பையும் பெருக்குகிறது; சிறிய நகர்வுகளும் பெரிய சரிவுகளைத் தூண்டக்கூடும்.
- நேரக் காரணிகளைப் புறக்கணித்தல்: குறுகிய காலாவதிகள் சரியான வர்த்தகங்களையும் செல்லாததாக்கிவிடக்கூடும்.
- ஏற்ற இறக்கத்தைத் துரத்துதல்: திடீர் நகர்வுகளால் Spreads விரிவடைந்து, விலை நழுவல் அதிகரிக்கிறது; அபாயத்தை வரையறுத்து சீராக இருக்கவும்.
- செலவுகளைப் புறக்கணித்தல்: இரவுநேர நிதியளிப்புக் கட்டணம் அல்லது ஆப்ஷனின் கால மதிப்புக் குறைவு முடிவுகளைப் பாதிக்கலாம்.
- மதிப்பாய்வுகளைத் தவிர்த்தல்: உத்தியையும் ஒழுக்கத்தையும் மேம்படுத்த வர்த்தகக் குறிப்பேட்டைப் பராமரிக்கவும்.
இந்தப் பழக்கங்களைத் தவிர்ப்பது உங்கள் மூலதனத்தைப் பாதுகாக்கவும் நிலையாகச் செயல்படவும் உதவுகிறது.
முக்கிய கருத்து
CFD, ஆப்ஷன்கள், ஃபியூச்சர்ஸ் ஆகியவற்றை ஒப்பிடும்போது:
- CFD: நெகிழ்வுத்தன்மை மற்றும் Leverage.
- ஆப்ஷன்கள்: எளிமை மற்றும் வரையறுக்கப்பட்ட அபாயம்.
- ஃபியூச்சர்ஸ்: நிறுவன ஹெட்ஜிங், அதிக மூலதனத் தேவை.
உங்கள் சிறந்த தேர்வு, உங்கள் நோக்கங்கள், அபாயத்தைத் தாங்கும் திறன், விரும்பும் தளம் ஆகியவற்றைப் பொறுத்தது. உங்கள் வர்த்தக அணுகுமுறைக்கு எது பொருந்தும் என்பதைப் பார்க்க, Deriv டெமோ கணக்கில் CFD மற்றும் ஆப்ஷன்கள் இரண்டையும் முயற்சிக்கவும்.


