
குறிப்பு: ஆகஸ்ட் 2025 முதல், நாங்கள் Deriv X தளத்தை வழங்குவதில்லை.
CFD வர்த்தகத்தைத் தொடங்குகிறீர்களா? நீங்கள் தேர்ந்தெடுக்கும் தளம் உங்கள் வர்த்தக அனுபவத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். Deriv நிறுவனத்தில் MetaTrader 5 (MT5), cTrader, Deriv X ஆகிய மூன்று சக்திவாய்ந்த தளங்களை வழங்குகிறோம். ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பலங்கள் உள்ளன. உங்கள் வர்த்தக பாணிக்கு மிகப் பொருத்தமானதைக் கண்டறிய ஒவ்வொன்றையும் விரிவாகப் பார்ப்போம்.
Deriv MetaTrader 5 (MT5): அனைத்தையும் உள்ளடக்கிய சக்திவாய்ந்த தளம்
MetaTrader 5 உலகின் மிகவும் பிரபலமான, அதிக வசதிகள் கொண்ட வர்த்தகத் தளங்களில் ஒன்றாகும். நீங்கள் தொடக்கநிலையாளராக இருந்தாலும் மேம்பட்ட வர்த்தகராக இருந்தாலும், தொழில்நுட்பப் பகுப்பாய்வு, வர்த்தக தானியக்கம், சந்தை கண்காணிப்பு ஆகியவற்றுக்கான சக்திவாய்ந்த கருவிகளை MT5 வழங்குகிறது. இதை டெஸ்க்டாப், வலை, மொபைல் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.
MT5 கணக்கு வகைகள்
உங்கள் வர்த்தகத் தேவைகளுக்கு ஏற்ப MT5 பல்வேறு கணக்கு வகைகளை வழங்குகிறது:
- Standard கணக்கு. ஃபாரெக்ஸ், சரக்குகள், Deriv இன் Tactical மற்றும் Derived Indices உட்பட பல்வேறு சொத்துகளை அணுகலாம்.
- Financial கணக்கு. நிதிச் சொத்துகளில் குறைவான ஸ்பிரெட்களை விரும்பும் வர்த்தகர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
- Swap-free கணக்கு. இரவுநேரக் கட்டணங்களைத் தவிர்க்கிறது; குறிப்பிட்ட நிதிக் கொள்கைகளைப் பின்பற்றும் வர்த்தகர்களுக்கு இது ஏற்றது.
- Zero Spread கணக்கு. ஸ்பிரெட் எதுவும் இல்லை; ஆனால் துல்லியமான செலவுக் கட்டுப்பாட்டுக்காக ஒவ்வொரு வர்த்தகத்துக்கும் கமிஷன் உள்ளது.
மேம்பட்ட வரைபடங்களும் பகுப்பாய்வும்
வர்த்தகர்கள் தங்கள் சந்தை உத்திகளை மேம்படுத்த உதவும் பல்வேறு வரைபட வகைகள், தொழில்நுட்பக் குறியீடுகள், வரைதல் கருவிகள் MT5 இல் உள்ளன. இது முழுமையாகத் தனிப்பயனாக்கக்கூடியது. உங்களுக்கு விருப்பமான அணுகுமுறைக்குப் பொருந்தும் வரைபடங்களையும் தளவமைப்புகளையும் அமைத்துக்கொள்ளலாம்.

Deriv cTrader: தடையற்ற மற்றும் சமூக வர்த்தகம்
cTrader என்பது தெளிவான, பயனர் நட்பு இடைமுகத்தில் கவனம் செலுத்தும் எளிமையான CFD வர்த்தகத் தளமாகும். இது டெஸ்க்டாப், வலை, மொபைல் ஆகியவற்றில் கிடைக்கிறது. உங்கள் அனுபவ நிலை எதுவாக இருந்தாலும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதைத் தனித்துவமாக்குவது எது? Copy Trading.
CFD Copy Trading
அனுபவம் வாய்ந்த வர்த்தகர்களின் வழியைப் பின்பற்ற விரும்புகிறீர்களா? cTrader இன் Copy Trading வசதி, தொழில்முறை வர்த்தகர்களின் உத்திகளைத் தானாகவே பிரதிசெய்ய உங்களை அனுமதிக்கிறது. இது தொடக்கநிலையாளர்களுக்குப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. இது வழங்குவது:
- அனுபவமிக்க வர்த்தகர்களிடமிருந்து நேரடியாகக் கற்கும் அனுபவம்.
- பல உத்திகளைப் பின்பற்றுவதன் மூலம் பல்வகைப்படுத்தல்.
- திரையின் முன் செலவிடும் நேரம் குறைவு. நீங்கள் முடிவுகளைக் கண்காணிக்கும்போது கடினமான பணியை மற்றவர்கள் செய்வார்கள்.

Deriv X: TradingView உடன் முழுமையாகத் தனிப்பயனாக்கலாம்
தனிப்பயனாக்கத்தை விரும்பும் வர்த்தகர்களுக்கு, Deriv X என்பது TradingView வரைபடங்களின் ஆற்றலை ஒருங்கிணைக்கும் நெகிழ்வான தளமாகும். இது வலை மற்றும் மொபைலில் கிடைக்கிறது. தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறையை மதிக்கும் வர்த்தகர்களுக்கு ஏற்ற அனுபவத்தை வழங்குகிறது.
Deriv X தளத்தைத் தனித்துவமாக்குவது எது?
- மிகவும் தனிப்பயனாக்கக்கூடியது: உங்கள் பாணிக்கு ஏற்ற அமைப்பை உருவாக்க, விட்ஜெட்களுடன் உங்கள் வர்த்தக டாஷ்போர்டை ஒழுங்கமைக்கவும்.
- TradingView ஒருங்கிணைப்பு: TradingView இன் மிகவும் தனிப்பயனாக்கக்கூடிய வரைபடங்கள், குறியீடுகள், வரைதல் கருவிகளின் பலனைப் பெறவும்.
- பல சொத்துக் கண்காணிப்பு: வெவ்வேறு சந்தைகளையும் கால அளவுகளையும் திறம்படக் கண்காணிக்க, பல வரைபடங்களை ஒரே நேரத்தில் பார்க்கவும்.

எந்த CFD தளம் உங்களுக்கு மிகவும் பொருந்தும் என்று உறுதியாகத் தெரியவில்லையா?
நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே சிறந்த தளம் அமையும்:
- MT5: மேம்பட்ட தொழில்நுட்பப் பகுப்பாய்வு மற்றும் பல்வேறு கணக்கு விருப்பங்களை விரும்பும் வர்த்தகர்களுக்கு ஏற்றது.
- cTrader: Copy Trading வசதியுடன் தொடக்கநிலையாளர்களுக்கு ஏற்ற தளம் உங்களுக்கு வேண்டுமெனில் மிகப் பொருத்தமானது.
- Deriv X: தனிப்பயனாக்கத்தையும் வலுவான வரைபடக் கருவிகளையும் விரும்பும் வர்த்தகர்களுக்குச் சிறந்தது.
உறுதியாக அறிய விரும்புகிறீர்களா? முதலில் அனைத்தையும் டெமோவில் சோதித்துப் பார்க்கவும்.
ஒவ்வொரு தளத்திலும் இலவச டெமோ கணக்கைத் திறந்து, எது உங்களுக்குப் பொருத்தமாக உள்ளது என்று பார்க்கவும். நேரடியாக அனுபவிப்பதே தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த வழி.
வர்த்தகம் செய்யத் தயாரா? இன்றே டெமோ கணக்கைத் திறந்து, உங்களுக்கு ஏற்ற வர்த்தகத் தளத்தைக் கண்டறியவும்!
Quiz
Copy Trading-க்கு எந்தத் தளம் சிறந்தது?


