
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட்டு வட்டியை “உலகின் எட்டாவது அதிசயம்” என்று ஒருமுறை அழைத்தார், அது முற்றிலும் சரியே. இப்போது Deriv தளத்தில் உள்ள Accumulator options மூலம், கூட்டு வளர்ச்சியை முற்றிலும் புதிய வழியில் பயன்படுத்தலாம்.
Accumulator options எவ்வாறு வேறுபடுகின்றன?
பாரம்பரிய options சந்தை மேலே அல்லது கீழே நகர்வதைச் சார்ந்திருக்கும் நிலையில், Accumulator options நிலைத்தன்மையை மையமாகக் கொண்டவை. விலை ஏற்றத்தாழ்வைக் கணிப்பதற்குப் பதிலாக, விலை நகர்வு நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும் என்பதே உங்கள் இலக்காகும். இது பக்கவாட்டு நகர்வுகளிலிருந்து லாபம் பெற உங்களுக்கு ஒரு வழியை வழங்குகிறது.
இது செயல்படும் விதம்:
- நீங்கள் வளர்ச்சி விகிதத்தை (5% வரை) அமைக்கிறீர்கள். அது உங்களுக்கான சாத்தியமான கொடுப்பனவையும் விலை வரம்பையும் தீர்மானிக்கிறது.

- விலை இந்த வரம்புக்குள் இருக்கும் வரை, ஒவ்வொரு Tick நிகழும்போதும் உங்கள் கொடுப்பனவு கூடிக்கொண்டே செல்கிறது.

- வர்த்தகத்தில் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதை (230 Tick வரை) நீங்களே முடிவு செய்யலாம். இதனால் உங்கள் உத்தியின் மீது கட்டுப்பாடு உங்களிடம் இருக்கும்.
- விலை வரம்பைத் தாண்டினால், வர்த்தகம் தானாகவே முடிவடையும். உங்கள் இழப்பு ஆரம்ப வர்த்தகத் தொகைக்கு மட்டுமே வரையறுக்கப்படும்.
Accumulator options வர்த்தகத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
- பக்கவாட்டுச் சந்தைகளில் வர்த்தகம் செய்யுங்கள். பெரிய விலை மாற்றங்களைக் கணிக்க வேண்டியதில்லை; அதற்குப் பதிலாக நிலைத்தன்மையிலிருந்து லாபம் பெறுங்கள்.
- உங்கள் சொந்த வரம்பை நிர்ணயியுங்கள். உங்கள் கொடுப்பனவு வாய்ப்பையும் விலை வரம்பையும் வரையறுக்கும் வளர்ச்சி விகிதத்தை (5% வரை) தேர்ந்தெடுங்கள்.
- உங்கள் கால அளவைத் தேர்ந்தெடுங்கள். எவ்வளவு நேரம் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை (230 Tick வரை) முடிவு செய்யுங்கள். இது உங்கள் நேரம் மற்றும் அபாய வெளிப்பாட்டின் மீது நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
- உங்கள் அபாயத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ளுங்கள். உங்கள் அதிகபட்ச இழப்பு எப்போதும் ஆரம்ப வர்த்தகத் தொகைக்கு மட்டுமே வரையறுக்கப்படும்; எனவே எதிர்பாராத ஆச்சரியங்கள் இல்லை.
- எப்போதும், எங்கிருந்தும் வர்த்தகம் செய்யுங்கள். வார இறுதி மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட, Volatility indices மீது 24/7 கிடைக்கும்.
சரியான சமநிலையைக் கண்டறிதல்
Accumulator options கூட்டு வளர்ச்சியின் ஆற்றலை வழங்குகின்றன, ஆனால் ஒரு நிபந்தனை உள்ளது: அதிக வளர்ச்சி விகிதம் என்பது குறுகிய விலை வரம்புகளைக் குறிக்கிறது. இதனால் உங்கள் வர்த்தகம் முன்கூட்டியே முடிவடையும் அபாயம் அதிகரிக்கிறது. உங்கள் வர்த்தகப் பாணிக்கு ஏற்ற அபாயம் மற்றும் வெகுமதியின் சரியான கலவையைக் கண்டறிவதே முக்கியம்.
Deriv Trader தளத்தில் Accumulator options பற்றி ஆராயுங்கள்
கூட்டு வளர்ச்சி செயல்படுவதைப் பார்க்கத் தயாரா? Accumulator options Deriv Trader தளத்தில் மட்டுமே கிடைக்கின்றன. அங்கே Volatility indices மீது அவற்றில் வர்த்தகம் செய்யலாம்.
உங்கள் உத்தியைச் சோதிக்க, USD 10,000 மெய்நிகர் நிதியுடன் கூடிய டெமோ கணக்கில் தொடங்குங்கள். அல்லது Deriv Academy தளத்தில் உள்ள இலவசப் பாடநெறிகள் மூலம் மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
Quiz
Accumulators வர்த்தகத்தில் சந்தை விலை நீங்கள் அமைத்த வரம்பிற்கு வெளியே நகர்ந்தால் என்ன நடக்கும்?


