
Volatility Indices வர்த்தகம் செய்வது ரோலர் கோஸ்டரில் பயணிப்பது போல இருக்கலாம் - சுவாரஸ்யமானது, கணிக்க முடியாதது, சில நேரங்களில் பதற்றம் தருவது. அதனால்தான் உறுதியான வர்த்தக உத்தி ஒன்றை வைத்திருப்பது மிக முக்கியம். Stop Loss (SL) மற்றும் Take Profit (TP) ஆர்டர்கள், சந்தை உங்களுக்குச் சாதகமாக நகர்ந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் வர்த்தகங்களுக்குத் தெளிவான வெளியேற்றப் புள்ளிகளை அமைப்பதன் மூலம் நீங்கள் கட்டுப்பாட்டில் இருக்க உதவுகின்றன.
Stop Loss மற்றும் Take Profit ஆர்டர்கள் என்றால் என்ன?
நீங்கள் ஒரு Volatility Index வர்த்தகம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு விலை நகர்வையும் பார்த்துக்கொண்டு, நல்லதே நடக்கும் என்று எதிர்பார்த்து அமர்ந்திருக்கலாம். ஆனால் அது மன அழுத்தம் தரும், அபாயம் நிறைந்த வர்த்தக முறையாகும். அதற்குப் பதிலாக, SL மற்றும் TP ஆர்டர்கள் லாபத்தை உறுதிப்படுத்தி, இழப்புகளைத் தானாகவே வரம்புக்குள் வைத்து, உங்களுக்காக முக்கியப் பணியைச் செய்கின்றன:
- Take Profit (TP): இது உங்கள் லாப இலக்கு. பணமாக்கிக்கொள்ள விரும்பும் விலையை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள். சந்தை அந்த நிலையை அடைந்ததும் உங்கள் வர்த்தகம் மூடப்பட்டு, உங்கள் லாபம் பாதுகாக்கப்படும்.
- Stop Loss (SL): இது உங்கள் பாதுகாப்புத் தடுப்பு. சந்தை உங்களுக்கு எதிராகத் திரும்பினால், உங்கள் இழப்புகளைக் கட்டுக்குள் வைக்க வர்த்தகம் தானாக மூடப்படும் விலையை நீங்கள் அமைக்கிறீர்கள்.
ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குவோம். நீங்கள் Volatility 50 ஐ USD 271 விலையில் வாங்கி, USD 280 விலையில் TP அமைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். சந்தை USD 280 நிலையை அடைந்தால், உங்கள் வர்த்தகம் மூடப்பட்டு USD 9 லாபம் உறுதிசெய்யப்படும். அதே நேரத்தில், USD 266 விலையில் SL அமைத்திருந்தால், வர்த்தகம் அங்கேயே மூடப்பட்டு, உங்கள் இழப்பு USD 5 ஆக மட்டுமே இருக்கும்.

சரியான சமநிலையைக் கண்டறிதல்: அபாய-லாப விகிதம்
உங்கள் SL மற்றும் TP நிலைகளை புத்திசாலித்தனமாக அமைக்க, வர்த்தகர்கள் அபாய-லாப விகிதத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது எளிமையான, ஆனால் சக்திவாய்ந்த சூத்திரமாகும்:
அபாய-லாப விகிதம் = சாத்தியமான லாபம் / சாத்தியமான இழப்பு
நம் எடுத்துக்காட்டில்:
- சாத்தியமான லாபம் = USD 9
- சாத்தியமான இழப்பு = USD 5
- அபாய-லாப விகிதம் = 1.8 (ஒவ்வொரு USD 1 அபாயத்திற்கும் USD 1.80 ஈட்டலாம்)
அதிக அபாய-லாப விகிதம் பெரிய சாத்தியமான லாபத்தைக் குறிக்கலாம். ஆனால், சந்தை நிலவரம் மற்றும் அபாயத்தை ஏற்கும் உங்கள் திறனின் அடிப்படையில் சரியான சமநிலையைக் கண்டறிவதே முக்கியம்.
SL மற்றும் TP ஆர்டர்கள் ஏன் முக்கியம்
SL மற்றும் TP ஆர்டர்கள் இரண்டையும் பயன்படுத்துவது என்பது வர்த்தகங்களில் ஊகித்துச் செல்வது அல்ல. உங்கள் பணத்தைப் பாதுகாக்கவும் ஆதாயங்களை அதிகரிக்கவும் புத்திசாலித்தனமான, உத்திசார்ந்த முடிவுகளை எடுப்பதே இதன் நோக்கமாகும்.
உங்கள் உத்தியைச் சோதிக்கத் தயாரா? டெமோ கணக்கில் அபாயமின்றிப் பயிற்சி செய்து, சந்தை ஏற்ற இறக்கங்களை நீங்கள் எவ்வளவு சிறப்பாகக் கையாள முடியும் என்பதைப் பாருங்கள்.
Quiz
உங்கள் Stop Loss ஆர்டர் செயல்படுத்தப்படும்போது என்ன நடக்கும்?


