மேம்பட்ட விளக்கப்பட பகுப்பாய்வுக்கு ஆப்ஜெக்ட்களைப் பயன்படுத்துதல்
Deriv MT5 தளத்தைப் பயன்படுத்தும் வர்த்தகர்களுக்கு விளக்கப்படங்கள் இன்றியமையாத கருவிகளாகும். அவை காலப்போக்கில் ஏற்படும் விலை நகர்வுகளையும் போக்குகளையும் காட்சிப்படுத்த உதவுகின்றன. இந்தப் பாடத்தில், விளக்கப்படங்களில் கிடைக்கும் ஆப்ஜெக்ட்களின் வகைகளைப் பற்றிய அடிப்படைகளைப் பார்ப்போம். அதைத் தொடர்ந்து, Deriv MT5 தளத்தில் உள்ள இன்னும் பல்வேறு பகுப்பாய்வு ஆப்ஜெக்ட்கள், அவற்றின் பயன்பாடுகள், உங்கள் வர்த்தக உத்திகளை மேம்படுத்த அவற்றை எவ்வாறு திறம்படப் பயன்படுத்துவது ஆகியவற்றை விளக்கும் வீடியோ பாடம் இடம்பெறும்.
பகுப்பாய்வு ஆப்ஜெக்ட்கள் பற்றிய கண்ணோட்டம்
Deriv MT5 தளத்தில் உள்ள ஆப்ஜெக்ட்கள் என்பவை, முக்கிய விலை நிலைகளைக் குறிக்கவும், போக்குகளைக் கண்டறியவும், முக்கியமான தகவல்களுக்குக் குறிப்புகள் சேர்க்கவும் உங்கள் விளக்கப்படங்களில் வைக்கக்கூடிய வரைகலைக் கருவிகள் ஆகும். வடிவங்கள், போக்குக் கோடுகள், Fibonacci கருவிகள், Gann கருவிகள் உட்பட மொத்தம் 44 வெவ்வேறு பகுப்பாய்வுக் கருவிகள் உள்ளன. விலை நகர்வுகளின் அடிப்படையில் தரவை உருவாக்கும் தொழில்நுட்பக் குறிகாட்டிகளைப் போலன்றி, இந்த வரைகலை ஆப்ஜெக்ட்கள் கைமுறைப் பயன்பாட்டை வழங்குகின்றன. இதன் மூலம் வர்த்தகர்கள் விளக்கப்படங்களைக் கண்ணால் பார்த்துப் பகுப்பாய்வு செய்ய முடிகிறது.
இந்தப் பகுப்பாய்வுக் கருவிகளை அணுக, “செருகு” மெனுவுக்குச் சென்று “ஆப்ஜெக்ட்கள்” விருப்பத்தின் மேல் சுட்டியை நகர்த்தவும். இங்கே, உங்கள் விளக்கப்பட பகுப்பாய்வை மேம்படுத்தக்கூடிய, கிடைக்கும் கருவிகளின் முழுமையான பட்டியலைக் காணலாம்.

விளக்கப்பட பகுப்பாய்வுக்கான அத்தியாவசிய ஆப்ஜெக்ட் வகைகள்
உங்கள் விளக்கப்பட பகுப்பாய்வை மேம்படுத்த Deriv MT5 தளத்தில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில முக்கிய பகுப்பாய்வு ஆப்ஜெக்ட்கள் இவை:
- கோடுகள்:
- கிடைமட்டக் கோடுகள்: ஆதரவு மற்றும் எதிர்ப்பு மண்டலங்கள் போன்ற குறிப்பிடத்தக்க விலை நிலைகளைக் குறிக்கப் பயன்படுகின்றன. இவை சாத்தியமான திருப்பு முனைகளை வர்த்தகர்கள் கண்டறிய உதவுகின்றன.
- செங்குத்துக் கோடுகள்: குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் வைக்கப்படும் இவை, முக்கியமான தேதிகளை
- அல்லது நிகழ்வுகளை விளக்கப்படத்தில் சிறப்பித்துக் காட்டி, உங்கள் வர்த்தகங்களைச் சரியான நேரத்தில் மேற்கொள்ள உதவுகின்றன.
- போக்குக் கோடுகள்: குறிப்பிடத்தக்க விலைப் புள்ளிகளை இணைத்து, போக்குகளின் திசையையும் வலிமையையும் காட்டுகின்றன. ஒரு போக்கு தொடர்கிறதா அல்லது திரும்புகிறதா என்பதைத் தீர்மானிக்க இவை மிகவும் முக்கியமானவை.
- கிடைமட்டக் கோடுகள்: ஆதரவு மற்றும் எதிர்ப்பு மண்டலங்கள் போன்ற குறிப்பிடத்தக்க விலை நிலைகளைக் குறிக்கப் பயன்படுகின்றன. இவை சாத்தியமான திருப்பு முனைகளை வர்த்தகர்கள் கண்டறிய உதவுகின்றன.
- சேனல்கள்:
- சம இடைவெளிச் சேனல்கள்: இரண்டு இணையான போக்குக் கோடுகளால் ஆன இந்தச் சேனல்கள், குறிப்பிட்ட எல்லைகளுக்குள் விலை நகர்வுகளைக் காட்சிப்படுத்த உதவுகின்றன. இதன் மூலம் சமச்சீரான போக்குகளையும் சாத்தியமான பிரேக்அவுட் புள்ளிகளையும் நீங்கள் கண்டறியலாம்.
- Andrews' Pitchfork: குறிப்பிடத்தக்க உச்சம் அல்லது தாழ்வுப் புள்ளியிலிருந்து வரையப்படும் மூன்று இணையான கோடுகளைப் பயன்படுத்தி, சாத்தியமான ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைகளை மதிப்பிடும் கருவி இது.
- சம இடைவெளிச் சேனல்கள்: இரண்டு இணையான போக்குக் கோடுகளால் ஆன இந்தச் சேனல்கள், குறிப்பிட்ட எல்லைகளுக்குள் விலை நகர்வுகளைக் காட்சிப்படுத்த உதவுகின்றன. இதன் மூலம் சமச்சீரான போக்குகளையும் சாத்தியமான பிரேக்அவுட் புள்ளிகளையும் நீங்கள் கண்டறியலாம்.
- Gann மற்றும் Fibonacci கருவிகள்:
- Gann கோடுகள்: 45 டிகிரி கோணங்களைக் குறிக்கும் இவை, விலைக்கும் காலத்துக்கும் இடையிலான உறவைக் காட்சிப்படுத்த உதவுகின்றன. மேலும், சந்தை ஏற்றப் போக்கில் உள்ளதா அல்லது இறக்கப் போக்கில் உள்ளதா என்பதையும் காட்டுகின்றன.
- Fibonacci Retracement கருவி: விலை நகர்வுக்குள் முக்கியமான Fibonacci நிலைகளைக் குறிப்பதன் மூலம், சாத்தியமான திருப்பு நிலைகளைக் கண்டறிய இந்தக் கருவி உதவுகிறது. விலைத் திருத்தங்கள் எங்கு நிகழக்கூடும் என்பது பற்றிய தெளிவையும் இது வழங்குகிறது.
- Gann கோடுகள்: 45 டிகிரி கோணங்களைக் குறிக்கும் இவை, விலைக்கும் காலத்துக்கும் இடையிலான உறவைக் காட்சிப்படுத்த உதவுகின்றன. மேலும், சந்தை ஏற்றப் போக்கில் உள்ளதா அல்லது இறக்கப் போக்கில் உள்ளதா என்பதையும் காட்டுகின்றன.
- Elliott Wave கருவிகள்: சந்தைச் சுழற்சிகள், தூண்டல் அலைகள், திருத்த அலைகள் ஆகியவற்றைக் கண்டறியப் பயன்படுகின்றன. எதிர்கால விலை நகர்வுகள் மற்றும் போக்குகள் பற்றிய மதிப்புமிக்க தெளிவை இவை வழங்குகின்றன.
ஆப்ஜெக்ட்களைத் தனிப்பயனாக்குதலும் நிர்வகித்தலும்
உங்கள் விளக்கப்பட அனுபவத்தை உங்களுக்கு ஏற்றவாறு அமைக்க, Deriv MT5 தளத்தில் ஆப்ஜெக்ட்களின் தோற்றத்தைத் தனிப்பயனாக்கலாம்:
- பண்புகளை அணுகுதல்: ஏதேனும் ஒரு ஆப்ஜெக்ட்டின் மீது வலது கிளிக் செய்து, நிறம், அகலம், பாணி போன்ற அடிப்படை அமைப்புகளை மாற்ற “பண்புகள்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பகுப்பாய்வு உத்திக்கு ஏற்ப தெளிவாகத் தெரியும்படி ஒவ்வொரு ஆப்ஜெக்ட்டையும் தனிப்பயனாக்கவும்.
- ஆப்ஜெக்ட்களைச் சேர்த்தல் மற்றும் மாற்றுதல்: கிடைமட்டக் கோடுகள் போன்ற எளிய ஆப்ஜெக்ட்களை ஒரே கிளிக்கில் சேர்க்கலாம். போக்குக் கோடுகள், சேனல்கள் போன்ற சிக்கலான ஆப்ஜெக்ட்களுக்குப் பல கட்டுப்பாட்டுப் புள்ளிகள் தேவைப்படும். ஆப்ஜெக்ட்டை உருவாக்கிய பிறகு, அதை விரும்பிய இடத்துக்கு இழுத்துச் செல்லலாம் அல்லது எளிதாக அளவை மாற்றலாம்.
- ஆப்ஜெக்ட்களை நீக்குதல்: உங்கள் விளக்கப்படத்திலிருந்து ஒரு ஆப்ஜெக்ட்டை அகற்ற, அதன் மீது வலது கிளிக் செய்து “நீக்கு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது விசைப்பலகையில் Backspace விசையை அழுத்தவும். தவறு செய்துவிட்டால், “நீக்குவதைச் செயல்தவிர்” விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.
- பல விளக்கப்படங்களை ஒழுங்கமைத்தல்: Deriv MT5 தளத்தில் ஒரே நேரத்தில் பல விளக்கப்படங்களுடன் பணிபுரியலாம். “சாளரங்கள்” மெனு வழியாக இந்த விளக்கப்படங்களை உங்கள் விருப்பப்படி வரிசைப்படுத்தலாம்.
முடிவுரை: ஆப்ஜெக்ட்களின் மூலம் உங்கள் வர்த்தகத்தை மேம்படுத்துதல்
உங்கள் வர்த்தகத் திறன்களை மேம்படுத்த, Deriv MT5 தளத்தில் பகுப்பாய்வு ஆப்ஜெக்ட்களைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி பெறுவது அவசியம். கிடைக்கும் பல்வேறு ஆப்ஜெக்ட்களைப் புரிந்துகொண்டு, உங்கள் குறிப்பிட்ட பகுப்பாய்வுத் தேவைகளுக்கு ஏற்ற கருவிகளைப் பயன்படுத்தி, உங்கள் விளக்கப்படங்களைத் தனிப்பயனாக்குவதன் மூலம் உங்கள் தொழில்நுட்பப் பகுப்பாய்வை கணிசமாக மேம்படுத்தலாம். உங்கள் வர்த்தகப் பயணத்தில் நீங்கள் முன்னேறும்போது, தொடர்ந்து
Quiz
ஆதரவு மற்றும் எதிர்ப்பு போன்ற முக்கியமான விலை நிலைகளைக் குறிக்க எந்தக் கருவி பயன்படுத்தப்படுகிறது?
Gann கோடு என்றால் என்ன?
Deriv MT5 தளத்தில் ஒரு சார்ட் பொருளை எவ்வாறு தனிப்பயனாக்குவது?


