முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
பாடம்
10
அந்நியச் செலாவணி | மேம்பட்டது

நாணய ஒட்டுறவு உத்திகளைப் புரிந்துகொள்ளுதல்

கால அளவு
3
நிமிடங்கள்

இந்தப் பாடத்தில், வீடியோவில் அறிமுகப்படுத்தப்பட்ட கருத்துகளுக்குத் துணையாக, ஃபாரெக்ஸ் சந்தையில் ஃபாரெக்ஸ் சந்தை அடிப்படைகள் உங்கள் வர்த்தக அணுகுமுறையையும் அபாய மேலாண்மை உத்திகளையும் மேம்படுத்தும் நாணய ஒட்டுறவு உத்திகளை ஆழமாகப் பார்ப்போம். வீடியோ ஒட்டுறவின் அடிப்படைகளையும் வர்த்தகத்தில் அதன் பயன்பாட்டையும் விளக்குகிறது. இந்தப் பாடம் கூடுதல் நுண்ணறிவுகளையும் முக்கியக் கருத்தில் கொள்ள வேண்டியவற்றையும், நாணய ஒட்டுறவுகளின் அடிப்படையில் உங்கள் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான உத்திகளையும் வழங்கும்.
‍

ஒட்டுறவுகளின் தன்மை

ஒட்டுறவு என்பது இரண்டு சொத்துகள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக எந்த அளவுக்கு நகர்கின்றன என்பதை அளவிடுகிறது. வெவ்வேறு நாணய ஜோடிகள் எவ்வாறு ஒட்டுறவு கொண்டுள்ளன என்பதைப் புரிந்துகொண்டால், சாத்தியமான வர்த்தக வாய்ப்புகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெற முடியும். ஒரு வர்த்தகராக, நாணய ஜோடிகளுக்கு இடையிலான நேர்மறை மற்றும் எதிர்மறை ஒட்டுறவுகளை அறிந்துகொள்வது பின்வருவனவற்றைச் செய்ய உங்களுக்கு உதவும்:

  1. சந்தை உறவுகளை அடையாளம் காணுதல்: நேர்மறை ஒட்டுறவு என்பது இரண்டு சொத்துகள் பொதுவாக ஒரே திசையில் நகரும் என்பதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, EUR/USD ஜோடி உயர்ந்தால், GBP/USD ஜோடியும் அதைப் பின்தொடர வாய்ப்புள்ளது. மாறாக, எதிர்மறை ஒட்டுறவு என்பது ஒரு சொத்தின் நகர்வு மற்றொரு சொத்துக்கு எதிர்திசையில் இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. தங்கத்துக்கும் அமெரிக்க டாலருக்கும் இடையிலான உறவு இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
    ‍
  2. பொருளாதார நிகழ்வுகளைக் கண்காணித்தல்: நாணய ஒட்டுறவுகள் பெரும்பாலும் பொருளாதார அடிப்படைகளுக்கும் புவிசார் அரசியல் நிகழ்வுகளுக்கும் எதிர்வினையாற்றுகின்றன. பல நாடுகளின் பொருளாதாரக் குறிகாட்டிகளைக் கண்காணித்து வந்தால், இந்த மாற்றங்களுக்கு ஒட்டுறவு கொண்ட ஜோடிகள் எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பதை முன்கூட்டியே கணிக்க உதவும்.
    ‍
  3. ஒட்டுறவுக் குணகங்களைப் பயன்படுத்துதல்: ஒட்டுறவுக் குணகங்கள் போன்ற அளவீட்டு முறைகள், நாணய ஜோடிகளுக்கு இடையிலான உறவுகளின் வலிமையையும் திசையையும் வர்த்தகர்கள் அடையாளம் காண உதவுகின்றன. மதிப்புகள் -1 (முழுமையான எதிர்மறை ஒட்டுறவு) முதல் +1 (முழுமையான ஒட்டுறவு) வரை இருக்கும். பூஜ்ஜிய மதிப்பு ஒட்டுறவு இல்லை என்பதைக் குறிக்கிறது.
    ‍

ஒட்டுறவு வர்த்தகத்தின் உத்தி சார்ந்த பயன்பாடு

உங்கள் வர்த்தகத்தில் நாணய ஒட்டுறவுப் பகுப்பாய்வை திறம்படப் பயன்படுத்துவதற்கான மேம்பட்ட உத்திகள் இங்கே உள்ளன:

  1. உறுதிப்படுத்தும் வர்த்தகங்கள்: ஒட்டுறவு கொண்ட இரண்டு ஜோடிகள் ஒரே திசையில் நகரும்போது, முதன்மை நாணய ஜோடியில் ஒரு நிலையை எடுக்கும் உங்கள் நம்பிக்கை வலுப்படும். எடுத்துக்காட்டாக, EUR/USD மற்றும் GBP/USD இரண்டும் மேல்நோக்கிய போக்கில் இருந்தால், EUR/USD இல் அதிக நம்பிக்கையுடன் லாங் நிலையில் நுழையலாம் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
    ‍
  2. எதிர்மறை ஒட்டுறவுகள் மூலம் பல்வகைப்படுத்துதல்: எதிர்மறை ஒட்டுறவு காட்டும் ஜோடிகளில் வர்த்தகம் செய்வதன் மூலம், உங்கள் போர்ட்ஃபோலியோவைச் சமநிலைப்படுத்தி அபாயத்தை மேலும் திறம்பட நிர்வகிக்கலாம். எடுத்துக்காட்டாக, ஆஸ்திரேலிய டாலரில் லாங் நிலை உங்களிடம் இருந்தால், நியூசிலாந்து டாலரில் ஷார்ட் நிலையைக் கருத்தில் கொள்ளவும். பண்டங்களின் விலை மாற்றங்களால் இந்த நாணயங்கள் ஒன்றுக்கொன்று எதிராக நகரக்கூடும்.
    ‍
  3. ஒட்டுறவின் அடிப்படையில் நிலையின் அளவை நிர்ணயித்தல்: ஜோடிகளின் ஒட்டுறவைப் புரிந்துகொள்வது உங்கள் நிலையின் அளவையும் தீர்மானிக்க உதவும். எடுத்துக்காட்டாக, அதிக ஒட்டுறவு கொண்ட இரண்டு ஜோடிகளில் நீங்கள் வர்த்தகம் செய்தால், உங்கள் மொத்த வெளிப்பாட்டைக் குறைக்க நிலையின் அளவைக் குறைப்பது விவேகமானதாக இருக்கும்.
    ‍
  4. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உத்திகளை மாற்றியமைத்தல்: மாறிவரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப உங்கள் உத்திகளை மாற்றியமைக்கவும். முன்பு நம்பகமாக இருந்த ஒட்டுறவு பலவீனமடையத் தொடங்குவதை நீங்கள் கவனித்தால், உங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்து, சந்தையின் இயக்கத்துக்குப் பொருந்தாத நிலைகளிலிருந்து வெளியேறுவதற்கான நேரம் வந்திருக்கலாம்.
    ‍

ஒட்டுறவைக் கண்காணித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல்

நாணய ஒட்டுறவு உத்திகளை வெற்றிகரமாகச் செயல்படுத்த, தொடர்ச்சியான கண்காணிப்பும் பகுப்பாய்வும் முக்கியம்:

  1. ஒட்டுறவு அளவீடுகளைத் தொடர்ந்து புதுப்பித்தல்: பொருளாதார நிலைமைகள், சந்தை உணர்வு அல்லது புவிசார் அரசியல் மாற்றங்களால் ஒட்டுறவுகள் காலப்போக்கில் மாறக்கூடும். உங்கள் பகுப்பாய்வை வழக்கமாகப் புதுப்பிப்பது, தற்போதைய சந்தை இயக்கத்துடன் நீங்கள் இணைந்திருக்க உதவுகிறது.
    ‍
  2. ஒட்டுறவு அணிகளைப் பயன்படுத்துதல்: ஒட்டுறவு அணி என்பது பல நாணய ஜோடிகளுக்கு இடையிலான ஒட்டுறவுகளின் காட்சி வடிவமாகும். எந்த ஜோடிகள் நேர்மறையாக அல்லது எதிர்மறையாக ஒட்டுறவு கொண்டுள்ளன என்பதை விரைவாக மதிப்பிட்டு, தகவலறிந்த வர்த்தக முடிவுகளை எடுக்க இந்தக் கருவி உதவும்.
    ‍
  3. செயல்திறன் அளவீடுகளை மதிப்பீடு செய்தல்: ஒட்டுறவு அடிப்படையிலான உத்திகளைச் செயல்படுத்திய பிறகு, உங்கள் வர்த்தகங்களின் செயல்திறன் அளவீடுகளை வழக்கமாக மதிப்பாய்வு செய்யவும். உங்கள் அணுகுமுறையை உறுதிப்படுத்தவும் தேவைக்கேற்பச் சீரமைக்கவும், ஒட்டுமொத்த லாபத்திலும் அபாய மேலாண்மையிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கவனிக்கவும்.
    ‍

முடிவுரை: நாணய ஒட்டுறவுகளை முழுமையாகப் பயன்படுத்துதல்

நாணய ஒட்டுறவு உத்திகளைப் புரிந்துகொண்டு திறம்படப் பயன்படுத்தினால், Deriv MT5 தளத்தில் உங்கள் வர்த்தக வெற்றியை மேம்படுத்தலாம். நாணய ஜோடிகளுக்கு இடையிலான உறவுகளை அறிந்து, வர்த்தகங்களை உறுதிப்படுத்தி, அபாய மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், ஃபாரெக்ஸ் சந்தையில் நீங்கள் மிகத் திறமையாகச் செயல்பட முடியும். இந்தக் கருத்துகளின்படி செயல்படுவது எப்படி என்பதை விளக்கும் வீடியோ பாடத்துக்குச் செல்லும்போது, உங்கள் வர்த்தகச் செயல்திறனை மேம்படுத்த இந்த உத்திகளை நினைவில் கொள்ளவும்.

Quiz

1 என்ற ஒட்டுறவு குணகம் எதைக் குறிக்கிறது?

உறுதிப்படுத்தும் வர்த்தகங்கள் வர்த்தக முடிவுகளை எவ்வாறு மேம்படுத்த உதவும்?

தொடர்பு அளவீடுகளை (correlation metrics) தொடர்ந்து புதுப்பிப்பது ஏன் முக்கியம்?

Analyse markets with AI-powered insights

Explore TradersView
WhatsApp