Volatility indices வர்த்தகத்தின் அடிப்படைகள்
கடந்த பாடத்தில் விவாதித்தபடி, Volatility indices என்பவை நிஜ உலகச் சந்தையின் ஏற்ற இறக்க நடத்தையைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தனித்துவமான நிதிக் கருவிகளாகும். வர்த்தகர்களை ஈர்க்கும் கூடுதல் அம்சங்களை ஆராய்வதன் மூலம், இந்தச் சுட்டெண்களை நீங்கள் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள உதவுவதே இந்தப் பாடத்தின் நோக்கமாகும்.
Volatility indices இன் செயல்பாட்டு முறை
Volatility index ஒவ்வொன்றும் விலை நகர்வுகளை உருவகப்படுத்தும் மேம்பட்ட அல்காரிதம்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்தக் கருவிகள் குறியாக்கவியல் ரீதியாகப் பாதுகாப்பான சீரற்ற எண் உருவாக்கியால் உருவாக்கப்படுகின்றன. பாரம்பரிய சந்தைகளைப் போலன்றி, இந்தச் சுட்டெண்கள் வெளிப்புறச் சந்தைக் காரணிகளைச் சார்ந்திருப்பதில்லை. அதாவது, பொருளாதாரச் செய்திகள் அல்லது நிகழ்வுகளிலிருந்து சுயாதீனமாகச் செயல்படுகின்றன. இந்த அமைப்பு வெளிப்புறக் காரணிகளின் தாக்கத்தைக் குறைப்பதுடன், சீரான விலை நடத்தையையும் அளிக்கிறது. இதனால் வர்த்தகர்களுக்கு மேலும் முன்கணிக்கக்கூடிய வர்த்தகச் சூழல் கிடைக்கிறது. Volatility indices வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட 24/7 வர்த்தகம் செய்யக் கிடைக்கின்றன. இதனால் சந்தைகளை இரவும் பகலும் அணுக முடியும்.
வர்த்தகத்தில் உணர்ச்சிக் கட்டுப்பாடும் ஒழுக்கமும்
வர்த்தகம் பெரும்பாலும் உணர்ச்சிகளின் ஏற்ற இறக்கம் நிறைந்த பயணமாக இருக்கலாம். ஏற்ற இறக்கம் அதிகமுள்ள கருவிகளில் இது குறிப்பாக உண்மையாகும். ஆனால் Volatility indices மேலும் ஒழுங்குமுறையான அணுகுமுறையை ஊக்குவிக்கின்றன. ஏனெனில், பாரம்பரிய சந்தைகளில் பொதுவாகப் பீதியை ஏற்படுத்தும் வெளிப்புறத் தாக்கங்களுக்கு அஞ்சாமல் வர்த்தகர்கள் இந்தக் கருவிகளில் ஈடுபடலாம். உணர்ச்சிவசப்படாமல் முறையாகச் செயல்படப் பயிற்சி பெறுவது சிறந்த முடிவெடுப்புக்கு உதவுவதுடன், மேம்பட்ட வர்த்தக முடிவுகளுக்கும் வழிவகுக்கும்.
தனிப்பயனாக்கக்கூடிய வர்த்தக உத்திகள்
Volatility indices 10% முதல் 250% வரை பல்வேறு ஏற்ற இறக்க நிலைகளைக் கொண்டிருப்பதால், தனிப்பட்ட அபாயம் ஏற்கும் திறனுக்கு ஏற்ப தங்கள் உத்திகளை வடிவமைக்கும் வாய்ப்பு வர்த்தகர்களுக்கு உள்ளது. அதிக ஏற்ற இறக்கம் கணிசமான லாப வாய்ப்பை வழங்கக்கூடும், ஆனால் அதிகரித்த அபாயத்தையும் கொண்டுள்ளது. ஒரு வர்த்தகராக, எச்சரிக்கையான உத்திகள் முதல் தீவிரமான உத்திகள் வரை தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத்தன்மை உங்களுக்கு உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு வசதியான எல்லைக்குள் செயல்படுவதுடன், உங்கள் வர்த்தக எல்லைகளையும் விரிவுபடுத்த முடியும்.

Volatility indices உடன் வர்த்தகத்தின் எதிர்காலம்
வர்த்தகத் தொழில்நுட்பம் வளர்ச்சியடையும்போது, ஃபின்டெக் முன்னேற்றங்களால் Volatility indices அதிக பலன் பெறும் நிலையில் உள்ளன. வர்த்தக முடிவுகளுக்கான AI அடிப்படையிலான அல்காரிதம்கள், விலை நகர்வுகளைக் கணிக்கும் இயந்திரக் கற்றல் மாதிரிகள் போன்ற புதுமைகள், இந்தத் துறையில் உள்ள வர்த்தகர்களுக்கு நம்பிக்கையூட்டும் எதிர்காலத்தைக் காட்டுகின்றன. இந்தப் போக்குகளை அறிந்திருப்பது, புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும், தங்கள் வர்த்தக நடைமுறைகளில் லாபத்தன்மையை மேம்படுத்தவும் வர்த்தகர்களுக்கு உதவுகிறது.
Quiz
பாரம்பரிய சந்தைச் சொத்துகளுடன் ஒப்பிடும்போது, Volatility Indices வர்த்தகத்தின் முக்கிய நன்மை எது?
Volatility Indices வர்த்தகம் செய்வது உணர்ச்சி ரீதியான ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள எவ்வாறு உதவும்?
Volatility Indices தொடர்பான தங்கள் உத்திகளைத் தனிப்பயனாக்கும்போது, வர்த்தகர் எந்தக் காரணியைக் கருத்தில் கொள்ள வேண்டும்?


