Deriv MT5 அறிமுகம்
Deriv MT5 பற்றிய எங்கள் அறிமுகப் பாடத்திற்கு வரவேற்கிறோம்! Contracts for Difference (CFD) வர்த்தகத்திற்கான உங்கள் முதன்மைத் தளமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு அடிப்படைச் சொத்துகளின் விலை நகர்வுகளை நீங்கள் ஊகித்து வர்த்தகம் செய்யலாம். உங்கள் வர்த்தகப் பயணத்தைத் தொடங்க உதவும் வகையில், இந்தப் பாடத்தில் Deriv MT5 இன் முக்கிய அம்சங்களையும் நன்மைகளையும் பார்ப்போம்.
Deriv MT5 பற்றிய மேலோட்டம்
Deriv MT5, பயன்படுத்த எளிதான இடைமுகத்திற்கும் மேம்பட்ட வர்த்தகத் திறன்களுக்கும் பெயர்பெற்ற MetaTrader 5 தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தளம் வர்த்தகர்களுக்கு சக்திவாய்ந்த விளக்கப்படக் கருவிகளையும் பல்வேறு தொழில்நுட்பக் குறிகாட்டிகளையும் வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் சந்தைப் போக்குகளை ஆய்வு செய்து, தங்கள் வர்த்தகங்கள் குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்கலாம்.
Deriv MT5 இன் முக்கிய அம்சங்கள்
- பயனர் நட்பு அனுபவம்: Deriv MT5 உள்ளுணர்வுடன் பயன்படுத்தும்படியும் எளிமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எளிதாக வழிசெலுத்தலாம் என்பதால், வர்த்தகம் செய்யும் முறையை விரைவாகக் கற்றுக்கொண்டு சந்தைகளில் தொடங்கலாம்.
- ஆழ்ந்த சந்தைப் பகுப்பாய்வு: Deriv MT5 இல் உள்ள மேம்பட்ட விளக்கப்படங்களும் தொழில்நுட்பக் குறிகாட்டிகளும் சந்தை நகர்வுகள் பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வழங்குகின்றன. இந்தக் கருவிகள் போக்குகளைக் கண்டறியவும், சாத்தியமான விலை மாற்றங்களைக் கணிக்கவும் உதவுகின்றன. இதனால் நீங்கள் சிறந்த வர்த்தக முடிவுகளை எடுக்க முடிகிறது.
- பல்வேறு வர்த்தக விருப்பங்கள்: பிரபலமான கரன்சிகள், பங்குகள், சரக்குகள், டெரைவ்டு சுட்டெண்கள் உட்பட பரந்த அளவிலான வர்த்தகக் கருவிகளை இந்தத் தளம் வழங்குகிறது. இந்த விரிவான தேர்வின் மூலம் உங்கள் வர்த்தக உத்திக்குப் பொருந்தும் வாய்ப்புகளை நீங்கள் கண்டறியலாம்.
- தனிப்பயனாக்கக்கூடிய அனுபவம்: ஒவ்வொருவருக்கும் தனித்துவமான வர்த்தக இலக்குகளும் பாணிகளும் உள்ளன. தனிப்பட்ட வர்த்தக விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பல்வேறு கணக்கு வகைகளை வழங்குவதன் மூலம் Deriv MT5 இதை அங்கீகரிக்கிறது.
Deriv MT5 இல் கிடைக்கும் கணக்கு வகைகள்
Deriv MT5 இல் வர்த்தகம் செய்யும்போது, உங்களுக்குப் பல கணக்கு விருப்பங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வர்த்தகத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது:
- ஸ்டாண்டர்ட் கணக்கு: தொடக்கநிலையினருக்கும் அனுபவம் வாய்ந்த வர்த்தகர்களுக்கும் ஏற்ற பல்துறைக் கணக்கு இது. போட்டித்தன்மை வாய்ந்த ஸ்பிரெட், ஸ்வாப் கட்டணங்களை வழங்குகிறது. இந்தக் கணக்கு பரந்த அளவிலான கருவிகளை ஆதரிப்பதால், அனைத்துத் தேவைகளுக்கும் ஏற்ற சிறந்த தேர்வாக உள்ளது.
- ஸ்வாப் இல்லாத கணக்கு: நீண்டகால வர்த்தக உத்திகளுக்கு ஏற்ற இந்தக் கணக்கு, இரவுநேர ஸ்வாப் கட்டணங்களை நீக்குகிறது. இதனால் கூடுதல் செலவின்றி நீண்ட காலத்திற்கு நிலைகளை வைத்திருக்க முடியும்.
- ஜீரோ ஸ்பிரெட் கணக்கு: இந்தக் கணக்கு நிலையான வர்த்தக கமிஷன்களை வழங்குவதால், உங்கள் வர்த்தகச் செலவுகள் குறித்த வெளிப்படைத்தன்மை கிடைக்கிறது. மாறிக்கொண்டே இருக்கும் ஸ்பிரெட்டின் தாக்கத்தைத் தவிர்க்க விரும்பும் ஸ்கால்பர்களுக்கும் நாள்தோறும் வர்த்தகம் செய்பவர்களுக்கும் இது குறிப்பாகப் பயனுள்ளதாகும்.
- நிதிக் கணக்கு: நிதிச் சந்தைகளில் வர்த்தகம் செய்வதை மையமாகக் கொண்ட இந்தக் கணக்கு, கிடைக்கக்கூடிய மிகக் குறைந்த ஸ்பிரெட்டை வழங்குகிறது. இதனால் அதிக அதிர்வெண்ணில் வர்த்தகம் செய்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
- தங்கக் கணக்கு: இந்தக் கணக்கு தங்கம் மற்றும் விலைமதிப்பு மிக்க உலோகங்களில் வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. இந்தச் சந்தையில் வர்த்தகர்களுக்கு அதிகபட்ச மதிப்பை வழங்க, குறைந்த ஸ்பிரெட்டைக் கொண்டுள்ளது.
- Financial STP கணக்கு: கமிஷன் இல்லாத, சற்று அகலமான ஸ்பிரெட்டைக் கொண்ட இந்தக் கணக்கு, கூடுதல் வர்த்தகக் கட்டணங்கள் இன்றி சந்தையுடன் நேரடித் தொடர்பை வழங்குகிறது. இதனால் பல்வேறு வர்த்தக உத்திகளுக்கு இது பொருத்தமானது.
முடிவுரை
சுருக்கமாகச் சொன்னால், Deriv MT5 என்பது பல்வேறு வர்த்தகத் தேவைகளுக்கு ஏற்ற ஒரு முழுமையான தளமாகும். நீங்கள் இப்போதுதான் தொடங்குகிறீர்களா அல்லது உங்கள் வர்த்தக உத்தியை மேம்படுத்த விரும்புகிறீர்களா என்பதைப் பொருட்படுத்தாமல் இது உதவும். பயன்படுத்த எளிதான இடைமுகம், மேம்பட்ட கருவிகள், பல்வேறு கணக்கு வகைகள் ஆகியவற்றின் மூலம், உங்கள் தனிப்பட்ட இலக்குகளுக்கு ஏற்ப உங்கள் வர்த்தக அனுபவத்தை வடிவமைத்துக்கொள்ளலாம்.
Deriv MT5 ஐப் பயன்படுத்தத் தயாராகும்போது, தளத்தின் அம்சங்களையும் கணக்கு விருப்பங்களையும் புரிந்துகொள்வது உங்கள் வர்த்தக முயற்சிகளுக்கு உறுதியான அடித்தளத்தை வழங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எங்கள் அடுத்த பாடத்திற்காகக் காத்திருங்கள். அதில் உங்கள் கணினி, தொலைபேசி அல்லது வலை உலாவியிலிருந்து Deriv MT5 ஐ அணுகும் வழியை உங்களுக்கு விளக்குவோம். மகிழ்ச்சியான வர்த்தகம் அமையட்டும்!
Quiz
Deriv MT5 முதன்மையாக எதற்குப் பயன்படுத்தப்படுகிறது?
இரவு நேர swap கட்டணங்களை நீக்கும் கணக்கு வகை எது?
Zero Spread கணக்கு என்ன நன்மையை வழங்குகிறது?


