முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
பாடம்
10
Deriv MT5 | தொடக்கநிலை

Deriv MT5 உடன் வர்த்தகத்தைத் தொடங்குங்கள்: கருவிப்பெட்டி பகுதி 2

கால அளவு
12
நிமிடங்கள்

Deriv MT5 பாடநெறிக்கு மீண்டும் வரவேற்கிறோம்! இந்தப் பாடத்தில், உங்கள் வர்த்தக நடவடிக்கைகளை நிர்வகிக்கவும், கண்காணிக்கவும், மதிப்பாய்வு செய்யவும் உதவும் கூடுதல் தாவல்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் பார்த்து, கருவிப்பெட்டியைப் பற்றிய நமது ஆய்வைத் தொடர்வோம். இந்த அம்சங்களைப் புரிந்துகொள்வது, தெளிவான தகவலுடன் வர்த்தக முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவும்.

‍

வெளிப்பாடு தாவல்

உங்கள் அனைத்துத் திறந்த நிலைகள் வர்த்தக உத்திகள் ஆகியவற்றுக்கான சொத்து நிலையின் சுருக்கத்தை வெளிப்பாடு தாவல் வழங்குகிறது. முக்கிய விவரங்கள்:

  • சொத்துகள்: கரன்சி அல்லது வர்த்தகக் கருவியின் பெயரைக் காட்டுகிறது.
    ‍
  • அளவு: லெவரேஜின் தாக்கம் உட்பட, உங்கள் நிலைகளின் மொத்த அளவை அலகுகளில் குறிக்கிறது.
    ‍
  • விகிதம்: உங்கள் கணக்கின் வைப்பு கரன்சியின் அடிப்படையில் வர்த்தகக் கருவியின் பரிமாற்ற விகிதத்தைப் பிரதிபலிக்கிறது.
    ‍
  • USD: லெவரேஜைத் தவிர்த்து, உங்கள் கணக்கின் வைப்பு கரன்சியில் செலவிடப்பட்ட தொகையைக் காட்டுகிறது.
    ‍
  • வரைபடம்: வைப்பு கரன்சியில் உங்கள் நிலைகளைக் காட்சி வடிவில் வழங்குகிறது. நீண்ட நிலைகள் நீலப் பட்டைகளாலும், குறுகிய நிலைகள் சிவப்புப் பட்டைகளாலும் குறிக்கப்படுகின்றன.
    ‍

வரலாறு தாவல்

அடுத்து, உங்கள் வர்த்தக நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வரலாறு தாவல் உள்ளது. இந்தத் தாவல் மூடப்பட்ட அனைத்து நிலைகள், ரத்து செய்யப்பட்ட ஆர்டர்கள், அனைத்து வைப்புகள் மற்றும் பணம் எடுப்புகளைப் பதிவு செய்கிறது. குறிப்பிட்ட கால அளவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவோ பல்வேறு வடிகட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ, உங்கள் வர்த்தக வரலாற்றின் விரிவான கண்ணோட்டத்தைப் பெறும் வகையில் காட்சியை நீங்கள் தனிப்பயனாக்கலாம்.

மேலும், உங்கள் கணக்கின் அறிக்கையைப் பதிவிறக்கி, ஆஃப்லைன் பகுப்பாய்வுக்காக HTML அல்லது XML கோப்பாகச் சேமிக்கலாம். இந்த அம்சம் உங்கள் செயல்திறனைக் கண்காணிக்கவும், காலப்போக்கில் உங்கள் வர்த்தக உத்திகளை மதிப்பீடு செய்யவும் உதவுகிறது.
‍

செய்தி தாவல்

செய்தி தாவல் பல்வேறு ஆதாரங்களிலிருந்து அத்தியாவசிய நிதிச் செய்திகளையும் சந்தை நிலவரங்களையும் வழங்குகிறது. இந்தக் காரணிகள் உங்கள் வர்த்தக உத்திகளையும் முடிவுகளையும் கணிசமாகப் பாதிக்கக்கூடும் என்பதால், சந்தை நிகழ்வுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் குறித்து அறிந்திருப்பது மிகவும் முக்கியம்.
‍

அஞ்சல்பெட்டி தாவல்

அஞ்சல்பெட்டி தாவலில், உங்கள் வர்த்தகக் கணக்கு தொடர்பான அறிவிப்புகள் மற்றும் புதுப்பிப்புகள் உட்பட, Deriv குழுவிடமிருந்து வரும் முக்கியமான செய்திகளையும் அறிவிப்புகளையும் நீங்கள் காணலாம். உங்கள் வர்த்தக அனுபவத்தைப் பாதிக்கக்கூடிய மாற்றங்களை நீங்கள் அறிந்திருக்க, அஞ்சல்பெட்டியை வழக்கமாகப் பார்க்கவும்.
‍

நாள்காட்டி தாவல்

நாள்காட்டி தாவல், வரவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் தரவு வெளியீடுகளைக் காட்டும் விரிவான பொருளாதார நாள்காட்டியைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நிகழ்விலும் அதன் தேதி, நேரம், நாடு மற்றும் எதிர்பார்க்கப்படும் சந்தைத் தாக்கம் போன்ற தகவல்கள் உள்ளன. இதனால் அடிப்படைப் பகுப்பாய்வை மேற்கொள்ளவும், சந்தை நகர்வுகளுக்குத் தயாராகவும் இது ஒரு மிகவும் மதிப்புமிக்க கருவியாக உள்ளது.
‍

எச்சரிக்கைகள் தாவல்

குறிப்பிட்ட வர்த்தக நிலைமைகள் அல்லது சந்தை நிகழ்வுகளுக்கான அறிவிப்புகளை அமைக்க எச்சரிக்கைகள் தாவல் உங்களை அனுமதிக்கிறது. எச்சரிக்கைகள் தாவலில் வலது கிளிக் செய்து ‘உருவாக்கவும்’ என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எச்சரிக்கைகளை உருவாக்கலாம். தளத்தை இடைவிடாமல் கண்காணிக்காமலே, முக்கிய விலை நிலைகள் அல்லது சந்தை மாற்றங்கள் குறித்த புதுப்பிப்புகளைப் பெற இந்த அம்சம் உதவுகிறது.

எச்சரிக்கையை உருவாக்கும்போது, அது செயல்படுவதற்கான நிபந்தனைகளை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். எடுத்துக்காட்டாக, bid அல்லது ask விலைகள் அல்லது வர்த்தக அளவு. மேலும், ஒலி அறிவிப்புகள், மின்னஞ்சல்கள் அல்லது மொபைல் எச்சரிக்கைகள் ஆகியவற்றில் எதன் மூலம் எச்சரிக்கைகளைப் பெற விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

எடுத்துக்காட்டு: நீங்கள் ஒரு குறிப்பிட்ட கரன்சி ஜோடியைக் கவனித்துவருகிறீர்கள், அதன் விலை ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டும்போது உங்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றால், நீங்கள் ஒரு எச்சரிக்கையை அமைக்கலாம். இதனால் எந்த ஒரு முக்கியமான வர்த்தக வாய்ப்பையும் நீங்கள் தவறவிடமாட்டீர்கள்.
‍

முடிவுரை

இந்தப் பாடத்தில், வெளிப்பாடு, வரலாறு, செய்தி, அஞ்சல்பெட்டி, நாள்காட்டி மற்றும் எச்சரிக்கைகள் தாவல்கள் உட்பட Deriv MT5 கருவிப்பெட்டியில் உள்ள பல்வேறு தாவல்களைப் பார்த்தோம். உங்கள் வர்த்தக நடவடிக்கைகளைத் திறம்பட நிர்வகிக்கவும் கண்காணிக்கவும் இந்த அம்சங்களைப் புரிந்துகொள்வது அவசியம்.

இந்த அறிவுடன், Deriv MT5 தளத்தில் நம்பிக்கையுடன் செயல்பட நீங்கள் நன்கு தயாராக இருப்பீர்கள். அடுத்த பாடத்தில், Deriv MT5 தளத்தில் வர்த்தகம் மேற்கொள்வதற்கான நடைமுறைப் படிகளை உங்களுக்கு விளக்குவோம். இதனால் உங்கள் உத்திகளைச் செயல்படுத்த நீங்கள் தயாராக இருப்பதாக உணர்வீர்கள். மகிழ்ச்சியான வர்த்தகம்!

‍

Quiz

Exposure Tab எந்தத் தகவலைச் சுருக்கமாகக் காட்டுகிறது?

Deriv MT5 தளத்தில் History Tab இன் நோக்கம் என்ன?

Deriv MT5 தளத்தில் எச்சரிக்கைகளை (Alerts) எவ்வாறு அமைக்கலாம்?

Analyse markets with AI-powered insights

Explore TradersView
WhatsApp