முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
பாடம்
8
Volatility Indices | தொடக்கநிலை

சரியான ஏற்ற இறக்கத்தைத் தேர்ந்தெடுத்தல்

கால அளவு
3
நிமிடங்கள்

வர்த்தகத்தில், ஏற்ற இறக்கம் என்பது குறிப்பிட்ட காலத்தில் ஒரு சொத்தின் விலையில் ஏற்படும் மாறுபாட்டின் அளவைக் குறிக்கிறது. இது சந்தை மாற்றங்களின் முக்கியக் குறியீடாகவும், அபாய மதிப்பீட்டில் இன்றியமையாத காரணியாகவும் செயல்படுகிறது. அதிக ஏற்ற இறக்கம் என்பது ஒரு சொத்தின் விலை குறுகிய நேரத்தில் வெகுவாக மாறக்கூடும் என்பதைக் குறிக்கிறது; இதனால் கணிசமான லாபம் அல்லது இழப்பு ஏற்படக்கூடும். மாறாக, குறைந்த ஏற்ற இறக்கம் என்பது விலை இயக்கங்கள் குறைவாக உள்ள, மேலும் நிலையான விலைச் சூழலைக் குறிக்கிறது. சந்தைகளில் திறம்பட வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற இறக்கத்தைப் புரிந்துகொள்வது முக்கியமாகும்.

Volatility Indices இந்த வெவ்வேறு விலை இயக்க நிலைகளைப் பிரதிபலிக்கின்றன; மேலும் வெவ்வேறு வர்த்தகப் பாணிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடம் Volatility Indices இன் பண்புகள், வர்த்தகர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள், திறம்பட வர்த்தகம் செய்வதற்கான நடைமுறை உத்திகள் ஆகியவற்றைப் பற்றிய புரிதலை வழங்கும்.
‍

Volatility Indices இன் பண்புகள்

Deriv நிறுவனம் பல்வேறு Volatility Indices வழங்குகிறது. ஒவ்வொன்றும் எதிர்பார்க்கப்படும் விலை மாற்றங்களை நிர்ணயிக்கும் ஏற்ற இறக்க சதவீதத்தால் வரையறுக்கப்படுகிறது. நிலையான Volatility Indices ஒவ்வொரு 2 விநாடிக்கும் ஒரு விலை இயக்கத்தை (டிக்) கொண்டிருக்கும் நிலையில், அதே ஏற்ற இறக்கங்களைக் கொண்ட, ஆனால் ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு டிக் உருவாகும் குறியீடுகளின் தேர்வையும் Deriv வழங்குகிறது. சின்னத்தில் (1s) என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் மூலம் இந்தக் குறியீடுகளை அடையாளம் காணலாம்.
பிரபலமான சில எடுத்துக்காட்டுகள் அவற்றின் ஏற்ற இறக்க நிலை விரிவாக விளக்கப்பட்டு கீழே உள்ளன:

  • Volatility 10 Index: 10% ஏற்ற இறக்கத்தைக் கொண்ட இந்தக் குறியீடு, நிலைத்தன்மையையும் சிறிய விலை இயக்கங்களையும் விரும்பும் வர்த்தகர்களுக்கு ஏற்றது. எனவே தொடக்கநிலையாளர்களுக்கும், கணிக்கக்கூடிய வர்த்தகச் சூழலை விரும்புவோருக்கும் இது மிகவும் பொருத்தமானதாகும்.
    ‍
  • Volatility 25 Index: 10 Index உடன் ஒப்பிடும்போது சற்று அதிக இயக்கத்தை வழங்கும் Volatility 25 Index, அபாயத்திற்கும் லாப வாய்ப்புக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துகிறது. ஓரளவு நிலைத்தன்மையைப் பராமரித்துக்கொண்டே சற்றுக் கூடுதல் செயல்பாட்டை அனுபவிக்க வர்த்தகர்களுக்கு இது வாய்ப்பளிக்கிறது.
    ‍
  • Volatility 100 Index: இந்தக் குறியீட்டின் ஏற்ற இறக்கம் 100% ஆகும்; இது மேலும் கணிக்க முடியாத சந்தைச் சூழலைக் குறிக்கிறது. இது அதிக வருவாய் வாய்ப்பை வழங்குகிறது. ஆனால் அதனுடன் வரும் அபாயங்களால், தீவிரமான வர்த்தக உத்திகளைக் கையாளக்கூடிய அனுபவம் வாய்ந்த வர்த்தகர்களுக்கு இது ஏற்றது.
    ‍
  • Volatility 150 Index: 150% என்ற தீவிர ஏற்ற இறக்கத்தைக் கொண்ட இந்தக் குறியீடு, வேகமான, அதிக அபாயமுள்ள சூழல்களில் சிறந்து விளங்கும் வர்த்தகர்களுக்கு ஏற்றது. கணிசமான லாபத்திற்கான வாய்ப்புகளை வழங்கினாலும், கணிசமான இழப்புகளுக்கான சாத்தியமும் இதில் உள்ளது. எனவே வலுவான அபாய மேலாண்மை உத்திகள் அவசியமாகின்றன.
    ‍

உங்கள் வர்த்தகப் பாணியையும் அபாயத்தைத் தாங்கும் திறனையும் மதிப்பிடுதல்

Volatility Index ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் தனிப்பட்ட வர்த்தகப் பாணியையும் அபாயத்தைத் தாங்கும் திறனையும் கருத்தில் கொள்வது முக்கியம்:

  • அபாய விருப்பம்: திடீர் விலை ஏற்ற இறக்கங்களில் நீங்கள் வசதியாக உணர்கிறீர்களா, அல்லது கணிக்கக்கூடிய இயக்கங்களை விரும்புகிறீர்களா? குறியீட்டைத் தேர்ந்தெடுப்பதில் உங்கள் அபாய விருப்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
    ‍
  • வர்த்தக அனுபவம்: தொடக்கநிலையாளர்கள் சந்தை இயக்கவியலைப் பழகிக்கொள்ள, Volatility 10 Index போன்ற குறைந்த ஏற்ற இறக்கம் கொண்ட குறியீடுகளுடன் தொடங்குவது பயனுள்ளதாக இருக்கும். மறுபுறம், அனுபவமுள்ள வர்த்தகர்கள் அதிக வருவாயை இலக்காகக் கொண்டு, மேலும் தீவிரமான Volatility 75 அல்லது 100 Indices ஆகியவற்றைத் தேடலாம்.
    ‍
  • உத்தி சார்ந்த மனப்பாங்கு: வர்த்தகங்களைக் கண்காணிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் எவ்வளவு நேரத்தையும் முயற்சியையும் செலவிடத் தயாராக உள்ளீர்கள் என்பதை மதிப்பிடவும். அதிக ஏற்ற இறக்கம் கொண்ட குறியீடுகளுக்கு அதிக கவனமும் விரைவான முடிவெடுப்பும் தேவைப்படலாம்; குறைந்த ஏற்ற இறக்கம் கொண்ட குறியீடுகள் மிகவும் நிதானமான வர்த்தக அணுகுமுறைக்கு இடமளிக்கும்.
    ‍

Volatility Indices வர்த்தகத்திற்கான நடைமுறை உத்திகள்

Volatility Index ஒவ்வொன்றும் அதன் ஏற்ற இறக்கப் பண்புகளின் அடிப்படையில் வெவ்வேறு வர்த்தக உத்திகளுக்குப் பொருந்தும். ஆயினும், Volatility Indices வர்த்தகம் செய்ய விரும்புவோருக்கான சில நல்ல நடைமுறைகள் இங்கே:

  1. Stop Loss ஆர்டர்களைப் பயன்படுத்துதல்: Volatility 75 அல்லது 100 போன்ற அதிக ஏற்ற இறக்கமுள்ள சந்தைகளில் Stop Loss ஆர்டர்களைப் பயன்படுத்துவது நல்ல நடைமுறையாகும். குறிப்பிட்ட விலையை எட்டும்போது நிலைகளைத் தானாக மூடுவதன் மூலம், சாத்தியமான இழப்புகளைக் குறைக்க இந்தக் கருவி உதவுகிறது.
    ‍
  2. போக்கைப் பின்தொடர்தல்: Volatility 50 மற்றும் 100 போன்ற குறியீடுகளுக்குப் போக்கைப் பின்தொடரும் உத்தியைச் செயல்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும். இதில் சந்தை இயக்கங்களைப் பகுப்பாய்வு செய்து போக்குகளைக் கண்டறிவதும், அந்தப் போக்குகளின் திசையில் வர்த்தகங்களை மேற்கொள்வதும் அடங்கும்.
    ‍‍
  3. பல்வகைப்படுத்தல்: உங்கள் வர்த்தகங்களைப் பல Volatility Indices முழுவதும் பரவலாக்குவது அபாயத்தை நிர்வகிக்க உதவும். எடுத்துக்காட்டாக, Volatility 10 Index மற்றும் Volatility 150 Index ஆகிய இரண்டிலும் நிலைகளை வைத்திருப்பது, பல்வேறு அளவிலான சந்தை இயக்கங்களைப் பயன்படுத்திக்கொண்டே அபாயத்தைச் சமநிலைப்படுத்த உங்களை அனுமதிக்கிறது.

Quiz

வர்த்தகச் சூழலில் volatility எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

எச்சரிக்கையான வர்த்தகர்களுக்கு Volatility 10 Index பொருத்தமானதாக இருப்பதற்கு எந்தப் பண்பு காரணமாகிறது?

ஏற்ற இறக்கம் அதிகமுள்ள சந்தைகளில் வர்த்தகர்கள் Stop Loss ஆர்டர்களை ஏன் பயன்படுத்த வேண்டும்?

Analyse markets with AI-powered insights

Explore TradersView
WhatsApp