முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்லவும்
கணக்குப் பாதுகாப்பு · வழிமுறைகள்

வலுவான, தனித்துவமான கடவுச்சொல்லை உருவாக்கவும்

உங்கள் Deriv கணக்கிற்கு மட்டுமே உரிய கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும். வேறொருவர் உங்கள் கணக்கை அணுகுவதை மேலும் கடினமாக்க, இந்தப் படிகளைப் பின்பற்றவும்.

தொடங்குவதற்கு முன்

உங்கள் Deriv கணக்கை அணுக முடியும் என்பதை உறுதிசெய்யவும். நம்பகமான கடவுச்சொல் மேலாளரையும் பயன்படுத்த நீங்கள் விரும்பலாம்.

உங்கள் கடவுச்சொல்லை வலுப்படுத்தவும்

3 படிகளில் உங்கள் கடவுச்சொல்லை வலுப்படுத்தவும்

வெவ்வேறு கணக்குகளில் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்தினால், ஒரு சேவையில் ஏற்படும் மீறல் உங்கள் மற்ற கணக்குகளையும் அபாயத்தில் ஆழ்த்தக்கூடும். முதலில் உங்கள் Deriv கணக்கிற்குத் தனிக் கடவுச்சொல்லை அமைக்கவும்.

1

1.தனித்துவமான கடவுச்சொல்லை உருவாக்கவும்

நீளமான கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும். சில சீரற்ற சொற்களைக் கொண்ட தொடர், குறுகிய சிக்கலான கடவுச்சொல்லை விட நினைவில் வைத்திருக்க எளிதானது; ஊகிக்கவும் கடினமானது. பெயர்கள், பிறந்த தேதிகள் மற்றும் முன்பு பயன்படுத்தியவற்றைத் தவிர்க்கவும். உங்கள் MT5 கணக்கிற்கும் வேறு கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும். கடவுச்சொல் மேலாளர் ஒன்று உங்களுக்காக அதை உருவாக்கித் தரும்.

2

2.உங்கள் Deriv கணக்கு அமைப்புகளில் மாற்றவும்

உங்கள் உலாவியில் home.deriv.com என உள்ளிட்டு, உள்நுழைக. பின்னர் உங்கள் கணக்கு அமைப்புகளில் கடவுச்சொல்லை மாற்றவும்.

3

3.பாதுகாப்பாகச் சேமிக்கவும்

உங்கள் கடவுச்சொல்லை யாருடனும் பகிர வேண்டாம்; செய்தியிலும் அனுப்ப வேண்டாம். அதைப் பாதுகாப்பாகச் சேமிக்க நம்பகமான கடவுச்சொல் மேலாளரைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும். பகிரப்படும் சாதனங்களில் சேமிப்பதைத் தவிர்க்கவும்.

உங்கள் கடவுச்சொல் வெளிப்பட்டிருக்கலாம் என நினைக்கிறீர்களா?

Deriv தளத்தில் உடனடியாக அதை மாற்றவும். பின்னர் அதைப் பயன்படுத்திய பிற தளங்களிலும் மாற்றவும். உங்கள் கணக்கில் உங்களுக்குத் தெரியாத செயல்பாடு இருப்பதைக் கண்டால், உடனடியாக எங்களைத் தொடர்புகொள்ளவும்.

உங்கள் Deriv கணக்கிற்குத் தனிக் கடவுச்சொல்லை அமைக்கவும்

உள்நுழைந்து உங்கள் கணக்கு அமைப்புகளில் கடவுச்சொல்லைப் புதுப்பிக்கவும். பின்னர் கூடுதல் பாதுகாப்பு அடுக்கிற்காக 2FA ஐ இயக்கவும்.

பொதுவான கேள்விகள்

உதவி தேவையா?

பொதுவான கேள்விகள்

இல்லை. இவற்றில் ஒன்றுக்குள் யாராவது நுழைந்துவிட்டால், மற்றொன்றும் அவர்களுக்குக் கிடைத்துவிடும். உங்கள் மின்னஞ்சல் கடவுச்சொல் இன்னும் முக்கியமானது, ஏனெனில் அதைப் பயன்படுத்தி உங்கள் மற்ற கணக்குகளின் கடவுச்சொல்லை மீட்டமைக்க முடியும்.

இரண்டையும் பயன்படுத்தவும். தனித்துவமான கடவுச்சொல் உங்கள் முதல் உள்நுழைவு படியைப் பாதுகாக்க உதவுகிறது; 2FA உங்கள் authenticator செயலியில் உள்ள குறியீட்டைப் பயன்படுத்தி இரண்டாவது படியைச் சேர்க்கிறது.

உங்கள் Deriv கணக்கிற்குத் தனிக் கடவுச்சொல்லை அமைக்கவும்

உள்நுழைந்து உங்கள் கணக்கு அமைப்புகளில் கடவுச்சொல்லைப் புதுப்பிக்கவும். பின்னர் கூடுதல் பாதுகாப்பு அடுக்கிற்காக 2FA ஐ இயக்கவும்.

எனது கடவுச்சொல்லை நிர்வகிக்கவும்

உதவி வேண்டுமா?

எங்கள் ஆதரவுக் குழு நேரலை அரட்டை மற்றும் WhatsApp வழியாக 24/7 கிடைக்கும்.

இந்தப் பிரிவில் உள்ள கட்டுரைகள்
WhatsApp